(Reading time: 8 - 16 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

சாந்ததுரை சத்யாவிற்கு பதில் சொல்லாமல் சக்தியைப் பார்த்தான். சக்தி அவன் பக்கம் பார்க்காமல் சுவரை பார்த்துக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்!

  

என்ன யோசிக்குறீங்க ராம்போ?” சாந்ததுரை சக்திக்கு ஊசி ரெடி செய்துக் கொண்டே அவளிடம் கேட்டான்.

  

நீ யாருன்னு யோசிக்குறேன் SD! திடீர்னு உங்க குடும்பத்துல எல்லோரும் காணாம போயிட்டீங்க. 15 வருஷம் கழிச்சு நீ மட்டும் வந்திருக்க. நடுல எங்கே போனீங்க, எதுக்கு போனீங்க??

  

நல்ல கேள்விகள்!சாந்ததுரை சக்திக்கு ஊசி போட்டுக் கொண்டே சாதாரணமாக சொன்னான்.

  

கேள்விக்கான பதில் சொல்லவே இல்லையே SD?” சக்தி சந்தேகம் மின்னக் கேட்டாள்!

  

நான் உங்களுக்கு தினம் தினம் ஹெர்பல் டீ போட்டு தருவேன் தெரியுமா சக்தி? நீங்க கூட டேஸ்ட்டா இருக்குன்னு பாராட்டுனீங்க. அதுல என்ன எல்லாம் போட்டேன்னு உங்களுக்கு தெரியுமா?”

  

சக்தி தெரியாது என்று தலையை ஆட்டினாள்.

  

ஆனாலும் டேஸ்ட்டா இருந்துச்சுல. அப்படி தான் சில விஷயங்கள், அதெல்லாம் தெரியாம இருக்குறதும் டேஸ்ட்டி!”

  

சக்தி எரிச்சலுடன் அவனை முறைத்தாள்.

  

கோபப்படாதீங்க சக்தி! நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்ற உரிமை எனக்கு இல்லை. சொல்ற வாய்ப்பு கிடைச்சா இந்த உலகத்துலேயே உங்க கிட்ட தான் முதல்ல சொல்வேன். ட்ரஸ்ட் மீ!”

  

சக்தி அவனை யோசனையாகப் பார்த்தாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.