“என்னன்னு முழுசா சொல்லலைனாலும், அதுல இல்லீகலா எதுவும் இல்லை. அதை என்னால சொல்ல முடியும். என் மேல ப்ராமிஸ்,” என்றான் சாந்ததுரை!
சக்தியின் முகம் 100% தெளிவாகவில்லை. இருந்தாலும் சாந்ததுரை சொன்னதை ஏற்றுக் கொண்டதாக தலையை ஆட்டினாள்.
🌼🌸❀✿🌷
மதியூரின் பெரிய கல்யாண மண்டபம் அலங்கரிக்கப்பட்டு மின்னிக் கொண்டிருந்தது. மண்டபத்தின் வெளியே அபினவ் வெட்ஸ் அஹல்யா என்று பூக்களால் அலங்கரிக்கப் பட்ட பெயர் பலகை பெரிதாக இருந்தது.
ஷாலினியும் அருணும் கூட்டத்தில் கூட்டமாக ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
சவீதா பம்பரமாக சுழன்று வேலை செய்துக் கொண்டிருந்தாள். தெரிந்தவர்களை வரவேற்பது, உணவு, இசை என ஒவ்வொன்றும் சரியாக இருக்கிறதா என்று கவனிப்பது எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு செய்துக் கொண்டிருந்தாள்.
சக்தி சவீதாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். சக்தியை கவனித்த சவீதா அவளிடம் வந்தாள்.
“ஜூஸ் கொடுத்தாங்களா சக்தி?” சவீதா சக்தியையும் உபசரித்தாள்!
“தந்தாங்க சவீதா. இந்த கல்யாணத்துல இவ்வளவு enthuவோட வேலை இருக்கீங்க???” புரியாத விஷயத்தை கேள்வியாக கேட்டாள் சக்தி!
“மனசு உறுத்துது சக்தி. என்னையும் ஒரு கருவியா வச்சு அஹல்யா மேல தப்பான செய்தி பரப்ப வச்சுட்டாங்களே! எத்தனை தடவை அஹல்யாவை திட்டி இருப்பேன் தெரியுமா! இப்போ அஹல்யாவை சத்யா மாதிரியே என் சொந்த தங்கையா மனசுல நினைச்சுட்டேன். இதுக்கு