(Reading time: 8 - 16 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

மேல ஒருத்தர் அவங்களை பத்தி தப்பா பேசட்டும். தொலைச்சுக் கட்டிடுவேன்,” என்றாள் சவீதா!

  

"யூ கோ கேர்ள்!" சக்தி சவீதாவை தன் பாணியில் பாராட்டி விட்டு, மணப்பெண் அறைக்கு வந்தாள். அங்கே மணப்பெண் அலங்காரத்தில் இருந்த அஹல்யாக்கு பூ வைத்து அழகுப் பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா.

  

அபினவ் சும்மாவே உன்னைப் பார்த்தா தலை சுத்திப் போயிடுவான். இப்போ மட்டும் பார்த்தான்னு வை, அவ்வளவு தான்!” சத்யா சொல்ல, அஹல்யா வெட்கம் மின்ன சிரித்தாள்.

  

சக்திக்கும் அவளை அப்படி மகிழ்ச்சி பொங்க பார்க்க சந்தோஷமாக இருந்தது.

  

அஹல்யா!” அபினவின் குரல் கேட்டு மூன்றுப் பேரும் திகைத்துப் போனார்கள்.

  

டேய் தம்பி, நீ இங்கே என்ன செய்ற? இன்னும் கல்யாணம் முடியலை. போ, போய் மணமகன் ரூம்ல இரு,”  என்றாள் சத்யா மிரட்டலாக!

  

சத்யாக்கா, அஹல்யாவை பார்க்க யார் வந்திருக்கான்னு பாருங்க, என்றான் அபினவ்!

  

சத்யா, சக்தி மட்டுமல்லாமல் அஹல்யாவும் யார் என்று தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் அபிநவ காட்டிய பக்கம் பார்த்தார்கள். அங்கே நின்றிருந்தவர்களை பார்த்து நம்ப முடியாமல் வாய் பிளந்தாள் அஹல்யா!

  

அம்மா, அக்கா????”

  

பெட்டியோடு நின்றிருந்தவர்கள் அதை கீழே போட்டு விட்டு அஹல்யாவை கட்டிக் கொண்டார்கள்.

  

இவர் அஹல்யா அக்காவோட கணவர்!” தள்ளி நின்றிருந்தவரை சக்தி, சத்யாவிற்கு அறிமுகம் செய்தான் அபினவ்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.