(Reading time: 27 - 54 minutes)
Chinna marumagal
Chinna marumagal

கொண்டார்

  

”என்னடா இப்படி இளைச்சிப் போயிட்ட”

  

”உன் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சி பசிக்குதும்மா” என சொல்லவும் கண்கள் கலங்கிப் போனார் மங்களம்

  

சட்டென அங்கு இங்கு என ஓடினார், வீரசிங்கம் புரிந்துக் கொண்டார், சிறிது நேரத்தில் வீரசிங்கம் பக்கத்தில் வேங்கையன் அமர்ந்திருக்க இருவருக்கும் சேர்த்து உணவு பரிமாறினார் மங்களம்.

  

ரசித்து ருசித்து சாப்பிட்டான் வேங்கையன்

  

”வேங்கை உப்பு காரம்லாம் சரியா இருக்காப்பா” என மங்களம் கேட்க அதற்கு அவனோ

  

”இத்தனை நாளும் சரியான சாப்பாடு இல்லாம நாக்கு செத்துப் போயிருந்தது, இப்பதான் அதுக்கு உசுரு வந்திருக்கு, அப்படியே என் மனசுக்கும் உசுரு தரனும்மா அது உன்னாலதான் முடியும்”

  

”என்னாலயா என்ன சொல்ற“

  

”சின்ன மருமகள் மனசை மாத்த உன்னாலதான் முடியும்”

  

”அதை நான் பார்த்துக்கிறேன் முதல்ல நீ சாப்பிடு”

  

”எப்ப திருச்சிக்கு போறோம்”

  

”இருடா இன்னிக்குதான் உனக்கு டைவரஸ் கிடைச்சிருக்கு முதல்ல குலதெய்வ கோயிலுக்கு போய் படையல் போட்டு சாமி கும்பிட்டு அப்புறம் ஒரு நல்ல நாளா பார்த்து கிளம்பலாம்”

  

”அவள் அங்க எப்படியிருக்காள்ன்னு தெரியலைம்மா, கவலையா இருக்கு அவளை நினைச்சி

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.