”இந்த கையை என்னிக்குமே நீங்க விடக்கூடாது மாமா” என சொல்ல அவனும்
”என் உசுரே போனாதான் அது நடக்கும் ஜானகி” என சொல்ல ஜானகியோ வேங்கையனைப் பார்த்து
”6 மாசம் ஆச்சே இனியுமா மஹதி உங்களை நினைச்சிக்கிட்டு இருப்பா”
”உன் காதல் உண்மையானதுதான் ஆனா உன் காதலை விட அவளோட காதல் புனிதமானது, அது தெரிஞ்சிக்க எனக்கு 6 மாசம் பிடிச்சது, இப்பவும் நான் தாமதிக்கப் போறதில்லை டைவர்ஸ் கிடைச்சிடுச்சி, இந்த விசயத்தை அப்பா அம்மாகிட்ட சொல்லி அவங்களை கூட்டிக்கிட்டு நான் போய் பொண்ணு கேட்கப்போறேன்”
”ஆனா மஹதி இப்ப என்ன நிலைமையில இருக்காள்ன்னு தெரியலையே நான் வேணா அவள்கிட்ட பேசி பார்க்கவா”
”வேணாம் உன் வாழ்க்கையை நீ பாரு இது என்னோட வாழ்க்கை நானே பார்த்துக்கிறேன்”
”இருந்தாலும்”
”வேணாம்” என தீர்த்துச் சொல்லிவிட மூர்த்தியும் ஜானகியிடம்
”ஜானகி விடு, அது அவரோட வாழ்க்கை மஹதியை அவரே பார்த்துக்குவாரு”
”இருந்தாலும் எனக்கு ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியா இருக்கு, நான் மட்டும் அன்னிக்கே போயிருந்தா மஹதி இப்ப கூட சின்ன மருமகளா இருந்திருப்பா, என்னாலயே அவள் வீட்டை விட்டுப் போனா, இப்ப அவள் எப்படியிருக்காளோ என்னவோ”
”அதை நினைச்சி கவலைப்படாத, நடந்தது நடந்துப் போச்சி, நீ வா நாம கல்யாண வேலைகளை பார்க்கலாம், நம்ம கல்யாணத்துக்கு கண்டிப்பா மஹதி வருவா”