வைச்சிட்டாங்க, ஊருக்குள்ள எங்களுக்கு இருந்த மானம் மரியாதை கௌரவம் எல்லாம் போச்சி, இதுக்கெல்லாம் காரணம் ஜானகின்னு நான் தப்பா நினைச்சேன், என்னையே என் அப்பா வீட்டை விட்டு விரட்டின பின்னாடி தனியா ஒரு வீடு எடுத்து தங்கினேன்
வேலைக்கு போய் வந்து தனியா அந்த வீட்ல தங்கறது கொடுமையா இருந்தது, பணம் இருந்தா போதும் சந்தோஷம் கிடைக்கும்னு நினைச்ச எனக்கு ஏமாற்றம்தான் கிடைச்சது, பணம் இருந்தும் சந்தோஷம் இல்லாம பைத்தியக்காரன் போல மாறிட்டேன், என் நிலைமையைப் பார்த்து எல்லாரும் பரிதாபப்பட்டாங்க, என் விசயம் என் அப்பா காதுவரைக்கும் போய் அவர் என்னை சந்திச்சிப் பேசினாரு
நான் செஞ்ச தப்பை நானேதான் சரியாக்கனும், அப்பதான் இழந்தது எனக்கு கிடைக்கும்னு சொன்னாரு நான் யோசிச்சிப் பார்த்தேன், ஜானகிக்கு நான் செய்த துரோகம் கண்ணு முன்னாடி வந்தது, அவளை நான் விட்டிருக்க கூடாது, எனக்காகவே வாழ்ந்தவளை விட்டுட்டு சொத்து வேணும்னு நினைச்சது என்னோட தப்பு
என் தப்பை உணர்ந்து நான் அவள்கிட்ட நேரா போய் மன்னிப்பு கேட்டேன், அவளும் என் நினைப்பாவே இருந்ததால என்னோட மன்னிப்பை அவள் ஏத்துக்கிட்டா, அவளை கூட்டிக்கிட்டு என் வீட்டுக்குப் போனேன், தனியா இரண்டு பேர் ஒரே வீட்ல இருந்தா ஊர் தப்பா பேசும்னு சொல்லி என் அப்பா மறுபடியும் என்னை வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டாரு,
இதுக்கே 6 மாசம் ஆயிடுச்சி. சரி ஜானகியை கல்யாணம் செய்துக்கலாம்னா இன்னும் டைவர்ஸ் கிடைக்கலைல்ல, அதான் முறையா டைவர்ஸ் வாங்கிட்டு கல்யாணம் செய்துக்கலாம்னு கோர்ட்டுக்கு வந்தோம்” என மூர்த்தி சொல்லி முடிக்க வேங்கையன் கோபப்படவில்லை அவனுக்கு நிம்மதியாக இருந்தது கவலைகள் மறந்து மென்மையாக சிரித்தவன் ஜானகியைப் பார்த்து
”உனக்கு சந்தோஷமா” என கேட்க அவளோ
”உங்க வாழ்க்கையை கெடுத்த பாவி நான், இப்ப என் வாழ்க்கை நல்லபடியாயிடுச்சி ஆனா உங்க வாழ்க்கை”