மறுபடியும் சின்ன மருமகள் வரவேண்டும், அதை அவன்தான் செய்ய வேண்டும் என்ற உறுதியில் அவர்களும் காத்திருந்தார்கள்.
அவர்களின் எண்ண ஓட்டம் நன்கறிந்த வேங்கையனோ மஹதியை நினைக்கலானான், மஹதியோ தன் ஊருக்கு வந்தும் முகத்தில் களையின்றி எந்நேரமும் கவலையுடன் இருந்தாள், அவளை அப்படி காண்கையில் மகேந்திரனுக்கு வெறுப்பே வந்தது, சரி நாட்கள் செல்ல செல்ல மகள் மாறுவாள் என நம்பிக்கையில் இருந்தார், ஆனால் அப்படி ஒரு மாற்றம் அவளிடம் ஏற்படவில்லை
நாட்கள் சென்றது
6 மாதங்கள் கழித்து…
கோர்ட் சம்மன் வேங்கையனுக்கு வந்தது. அவனே ஆச்சர்யப்டப்டான்
”என்ன இது நாமதான் ஜானகியை விட்டு வந்துட்டோமே, பின்ன எதுக்காக சம்மன் வந்திருக்கு” என நினைத்து குழம்பினான், மறுநாள் கோர்ட்டுக்கு சென்றான்.
அங்கு ஜானகியும் மூர்த்தியும் சிரித்து சிரித்து பேசுவதைக்கண்டு ஆச்சர்யப்பட்டான், குபேரனும் வேணியும் கூட மூர்த்தியின் தாய் தந்தையரிடம் மகிழ்வாக பேசுவதைக்கண்டு வியந்தான், வேங்கையன் வந்ததை கண்ட அவர்கள் அவனை வரவேற்றோர்கள், அவனோ மூர்த்தியிடம் வந்து
”எப்படி இதெல்லாம்” என கேட்க மூர்த்தியோ
”எல்லாத்துக்கும் காலம்தான் காரணம்”
”புரியலையே”
”உன் வாழ்க்கையும் ஜானகி வாழ்க்கையும் இப்படி ஆனதுக்கு காரணம் நான்தான்னு ஊரே என்னையும் என் குடும்பத்தையும் ஒதுக்கி வைக்காத அளவுக்கு எங்களை விலக்கி