”நான் என்னை மாத்திக்கிறேன்”
”வேணாம் உன்னை நீயே கட்டாயப்படுத்திக்கிட்டு என்கூட வாழ்ந்தா அது வாழ்க்கையா இருக்காது நரகமா இருக்கும், போதும் நீ கிளம்பு வா” என அழைக்க அவளோ தயங்கினாள்
”பயப்படாத உன் அப்பா அம்மா உன்னை எதுவும் சொல்லமாட்டாங்க என்னை நம்பு”
”என் வாழ்க்கையை நானே அழிச்சிக்கிட்டேனே”
”புலம்பி பிரயோசனம் இல்லை, காலம் போனா தன்னால எல்லாம் மாறும் யார் கண்டா அந்த மூர்த்தியே உன்னை தேடி வருவான் பாரு, சொத்துக்காக இல்லை உனக்காக வருவான்”
”எனக்கு நம்பிக்கையில்லை“
“ஆனா எனக்கு நம்பிக்கையிருக்கு” என சொல்ல அவளுக்கு மேற்கொண்டு எதுவும் பேச தோன்றவில்லை, அவன் ஒரு முடிவு எடுத்துவிட்டான், இனி தன்னால் இந்த வீட்டில் வாழமுடியாது, ஏன் அவனுடனும் மனம் ஒத்து வாழ இயலாது, சரி தாய் வீட்டிற்காவது செல்வோம் என நினைத்து அவனுடன் கிளம்பினாள்.
வீட்டு வேலையாட்களை அனுப்பிவிட்டு வீட்டை இழுத்து மூடி பெரிய அளவு பூட்டை பூட்டியவன் வீட்டிற்கு காவலுக்கு 2 பேரை வைத்துவிட்டு ஜானகியை அழைத்துக் கொண்டு நேராக குபேரன் வீட்டிற்குச் சென்றான்.
அதற்குள் அவர்களுக்கு விசயம் தெரிந்துவிட்டது போல, ஜானகியை அழைத்துக் கொண்டு வரலாம் என நினைத்து கிளம்பியவர்கள் ஜானகியை அழைத்துக் கொண்டு வேங்கையன் வருவதைக்கண்டு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தார்கள்.
ஜானகியோ வாசல்படியில் தயங்கி நிற்க வேங்கையனோ