”என்னைப் பத்தி கவலைப்படாத, போன முறை இதே கோர்ட்ல நின்னப்ப எனக்கு கஷ்டமாயிருந்தது, உன்னை இழக்க மனசில்லாம வருத்தப்பட்டேன், ஆனா இப்ப எனக்குள்ள எந்தவொரு சின்ன வருத்தமும் இல்லை, நீயிருக்க வேண்டியது வாழ வேண்டிது எல்லாமே மூர்த்திகூடதான், இப்ப நான் தெளிவா இருக்கேன், உன்னையும் மூர்த்தியையும் சேர்த்து வைச்சிட்டு நான் என் அப்பா அம்மாகிட்ட போகப் போறேன்”
”நாங்களும் வரலாமா” என மூர்த்தி கேட்க
”வேணாம் இப்ப வேணாம்”
”வேற எப்ப”
”உங்க கல்யாணத்தப்ப நான் அவங்களை கூட்டிட்டு வரப் பார்க்கிறேன் சரி வாங்க நேரத்தோட டைவர்ஸ் வாங்கிடலாம்” என உற்சாகமாகச் சொல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
தனி கோர்ட்டில் விசாரனை நடந்தது, ஜட்ஜம்மா வேங்கையனிடம்
”6 மாசம் கெடு காலம் கொடுத்திருந்தேன் இப்ப உங்க வாழ்க்கை எப்படியிருக்கு”
”அப்படியேதான் இருக்கு ஜட்ஜம்மா“
”ஏன் உங்களால உங்க மனைவியோட ஒரு நிமிஷம் கூட வாழ முடியலையா”
”ஆமாம் போன முறை எனக்கு நம்பிக்கையிருந்தது எப்படியாவது அவள் மனசுல இடம்பிடிப்போம்னு ஆனா இப்ப இல்லை, 6 மாசமா நாங்க தனியாதான் இருக்கோம், அவள் அவங்க அப்பா அம்மா வீட்ல இருந்தா, நான் தனியா தோப்பு வீட்ல இருந்தேன்”
”கோர்ட் தீர்ப்பை மதிக்காம இருந்திருக்கீங்க”