இவர்களின் வரவு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தந்தது, வேங்கையனோ சிரித்த முகத்துடன் மஹதியைப் பார்க்க அவளோ இன்னும் திக்பிரமையுடன் இருந்தாள், வீரசிங்கமும் மங்களமும் கைகூப்பி வணக்கம் சொல்லிக் கொண்டே மகேந்திரனிடம் வந்து நிற்க மகேந்திரனுக்கு பேச்சே வரவில்லை தடுமாறினார்.
பாஸ்கரனோ வேங்கையனைப் பார்த்தான் வேங்கையனும் பாஸ்கரனைப் பார்த்தான், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதைக்கண்ட மஹதிக்கு திக்கென்றது, பாஸ்கரனோ வேங்கையனைப் பார்த்து சிரித்தபடியே
”நண்பா” என அழைக்க வேங்கையனும் பாஸ்கரனிடம்
”அட நண்பா நீயா” என சொல்ல இருவருமே நெருங்கி வந்து கட்டியணைத்துக் கொண்டார்கள்.
இருவரும் தோழர்கள் போல, பல வருடங்கள் கழித்து சந்தித்தமையால் பலகதைகள் பேசியபடியே வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
அங்கு என்ன நடக்கிறது என அறியாமல் இவர்கள் தங்கள் பழைய கதைகளை பேசிக் கொண்டிருக்க அந்த கதைகளை கேட்டபின்புதான் மற்றவர்களுக்கு புரிந்தது, பால்ய சினேகிதர்கள் என்று, மஹதியோ மகேந்திரனை பயத்துடன் பார்க்க அவரோ திக்பிரமையுடன் இருந்தார், சாந்திக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை என்ன செய்வதென தெரியாமல் விழித்தார்.
முடிவில் வந்தவர்கள் அனைவரும் கலந்து பேசி முடித்து ஓய்ந்தார்கள், வீரசிங்கத்திற்கும் மங்களத்திற்கும் கூட பாஸ்கரனின் பெற்றோரை தெரிந்திருந்தது, ஒரே ஊர்க்காரர்கள் போல பலகதைகளை பேசி ஓய்ந்தார்கள், மகேந்திரன் வீட்டு வேலையாட்களோ வந்திருந்தவர்களுக்கு ஜூஸ் தர அதை பருகிக் கொண்டே பேசினார்கள்.
என்னதான் கதைகள் பேசினாலும் வேங்கையனின் பார்வை அடிக்கடி மஹதியை பார்த்தது, அதே போல பாஸ்கரனும் மஹதியை அடிக்கடிப் பார்த்தபடியே பேசினான், மஹதிக்கு இருவரின் பார்வையும் சங்கடத்தை தந்தது, யாருக்காக காத்திருந்தாளோ அவனே தேடி வந்தான், ஆனால் காரணம் என்ன என தெரியவில்லை, ஜானகி வரவில்லையே என நினைத்து