குழம்பினாள்.
ஒரு வழியாக அனைவரும் பேசி முடித்த பின்பு மகேந்திரனைப் பார்த்தார்கள், சாந்தியும் மஹதிக்கு துணையாக இருந்தார்.
”இவன் என் பால்ய நண்பன் பல வருஷம் கழிச்சி பார்த்ததால பேச ஆரம்பிச்சிட்டோம் தப்பா நினைக்காதீங்க சாரி” என்றான் பாஸ்கரன், மகேந்திரன் தலையை சரி சரியென ஆட்டிவைத்தார்.
வேங்கையனோ மஹதியை ஒரு முறை பார்த்துவிட்டு
”எல்லாரும் எப்படியிருக்கீங்க நல்லாயிருக்கீங்களா, உங்க எல்லாரையும் பார்க்கதான் நாங்க வந்திருக்கோம்” என சிரிப்புடன் சொல்ல மஹதிக்கு பேச்சே வரவில்லை
மங்களம் கூட பொண்ணு பார்க்க வருகிறோம் என்ற எண்ணத்தில் வரிசைதட்டுக்களுடன் வந்திருந்தார், பாஸ்கரனும் வரிசை தட்டுக்களை கொண்டு வந்திருந்தான். இரு வரிசை தட்டுக்களைக் கண்டதும் மஹதி ஊகித்துக் கொண்டாள், அவளை விட ஷார்ப்பாக இருந்தார் மகேந்திரன் சாந்தியோ
”இங்க என்னதான் நடக்குது” என வாய்விட்டே கேட்டு வைக்க வேங்கையன் வெட்கப்பட்டு தலை தாழ்த்தினான், அந்த வெட்கத்தைக்கண்டு மஹதி வாய் பிளக்க பாஸ்கரனோ
”ஓ நல்ல நேரம் போகுதுல்ல மறந்தே போயிட்டேன், அப்புறம் பொண்ணை பார்த்துட்டோம், எனக்கு பிடிச்சி போச்சி சின்னதா ஒப்புதாம்பூலம் செய்துக்கலாமா” என கேட்க அதைக்கேட்டு வேங்கையன் அதிர்ச்சியில் வாய் பிளந்தான்.
மங்களத்திற்கு திக்கென்றது, வீரசிங்கம் ஓரளவு புரிந்துக் கொண்டு மகேந்திரனை பார்க்க அவரோ தர்மசங்கடத்தில் மாட்டிக் கொண்டு தவித்தபடி இருந்தார், அதை அவர் புரிந்துக் கொண்டு மங்களத்தைப் பார்த்து கண்களால் பேசி அடக்கினார், அதில் மங்களம் கண்கள் கலங்க வீரசிங்கம் தன் மனைவிக்கு ஆதரவு தந்தார்.