விளக்கத்தைக்கேட்டு பொல்லாத கோபம் கொண்டான் கோவலன்
”இதப்பாரு இப்படியெல்லாம் என்னை நீ கேவலப்படுத்தக்கூடாது, நான் பக்கா ஜென்டில்மேன் தெரிஞ்சிக்கோ”
”யாரு நீங்களா கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கே கட்டின பொண்டாட்டியை தவிக்க விட்டுட்டு இன்னொருத்தியை பார்க்க போனவர்தானே நீங்க, ஒழுக்கம் கெட்டவரு”
”ஏய் என்ன வாய் நீளுது, உன்கிட்ட உண்மையை சொல்லிட்டுதானே போனேன், இந்த கல்யாணம் என் தாத்தாவோட ப்ளாக்மெயிலால நடந்தது, என்னால உன்கூட வாழமுடியாதுன்னு சொல்லிட்டுதானே போனேன் மறந்துட்டியா”
”மறக்கலை அதுக்காக என் தோழியை தேடி போவீங்களா”
“நான் என் காதலியை தேடிப் போனேன்”
”அவள் சொன்னாளா உங்களை காதலிக்கிறேன்னு”
”இல்லை ஆனா அப்புறமா அவளே உணர்ந்தா”
”உணர்றது அப்புறம் உங்களை காதலிக்கறதா அவள் நேரடியா சொன்னாளா”
”சொல்லலைன்னா என்ன காதல் காதல்தான்”
”நான் சொன்னேன்ல என் காதலை அதுபோல சொன்னாளா”
”இல்லை அதனால என்ன“
”இது எல்லாம் முறையான காதலா, கள்ளக்காதல் பொண்டாட்டியிருக்கறப்பவே கள்ளத்தனமா இன்னொரு பொண்ணோட சே சே பொண்டாட்டியோட தோழியையே காதலிக்கிறது”