”நான் ஊட்டி பார்க்கனும்” என்றாள் குழந்தை போல
”எது ஊட்டியா இப்பதானே நான் போய் வந்தேன்”
”ஆனா நான் ஊட்டியை பார்க்கலையே எனக்கும் ரெஸ்ட் வேணும்”
”ஷ்ஷ்ஷ் இப்பதான் அங்க இருந்து வந்தேன் திரும்பவும் போகனுமா இன்னொரு முறை உன்னை கூட்டிட்டுப் போறேன்”
”இன்னொரு முறை எங்க மாதவி வந்துட்டா அவளை கூட்டிக்கிட்டு ஹனிமூன் போவீங்க எனக்குத் தெரியாதா”
”எது ஹனிமூனா ஏய் என்ன வாய்க்கு வந்ததை பேசிக்கிட்டு இருக்க”
”இப்ப ஊட்டிக்கு கூட்டிட்டுப் போறீங்களா இல்லையா” என மிரட்ட அவனோ ஆச்சர்யப்பட்டு
”என்னை மிரட்டற அளவுக்கு வந்துட்டியா”
”ஆமாம்”
”கூட்டிட்டு போக முடியாது என்ன செய்வ” என கேட்க அவளோ குழந்தை போல விக்கி விக்கி அழ அவனுக்கு சிரிப்பாக இருந்தது
”நீ அழுதா அழகா இருக்க கண்ணகி இப்படியே இரு”
”சீ போ” என திட்டிவிட்டு அவள் காரை விட்டு இறங்கி நின்று அந்த பக்கம் இந்த பக்கம் என பார்த்தாள் அதைக்கண்டவன்
”ஏய் எதுக்கு அப்படி இப்படி வேடிக்கை பார்க்கற”