(Reading time: 20 - 39 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?


இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் றானே.

  

விளக்கம்
ஐந்து நபர்களுடைய கூலியைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது. வண்ணான், க்ஷவரத் தொழில் செய்பவன், கலைகளைக் கற்றுக் கொடுத்த வாத்யார், ப்ரஸவம் பார்த்த மருத்துவச்சி, பெருநோயைக் குணப்படுத்திய மருத்துவன் இவர்களின் கூலியைக் கொடுக்காதவர்களை எமதர்மன் என்ன பாடு படுத்துவானோ?

  

என சொல்ல அவனோ நொந்துப் போனான்.

  

”பரவாயில்லை எமதர்மன் எனக்கு தண்டனை தந்தாலும் சரி எண்ணெய் சட்டியில நான் வெந்தாலும் சரி இப்போதைக்கு சம்பளப் பணம் தர முடியாது, பணம் நிலுவையில இருக்கு ஆடிட்டிங் முடிஞ்ச பின்னாடிதான் பணத்தை எடுக்க முடியும்” என சொல்ல அவளோ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சென்றுவிட அவனுக்கு கஷ்டமாகிப் போனது

  

”வர வர இவளோட பிடிவாதம் எல்லை மீறுது, விட்டா இவளே என்னை அந்த எமன்கிட்ட ஒப்படைப்பாள் போல இருக்கு” என நினைத்தபடியே கம்பெனிக்கு சென்றான்.

  

ஆடிட்டிங் வேலையில் 4 நாட்கள் பிசியாக இருந்தான் ஒருவழியாக ஆடிட்டிங் வேலை முடிந்ததும் அப்பாடி என வீடு திரும்பி ஓய்வு எடுத்தான், கண்ணகியோ அவன் பக்கமே செல்லவில்லை அதுவே அவனுக்கு ஆச்சர்யத்தை தந்தது அதற்காகவே அவளை உசுப்பினான்

  

”ஆமா கண்ணகி உன்கிட்ட ஒண்ணு கேட்கனும் சொல்றியா”

  

”என்னது”

  

”மாதவிக்கு என்ன கலர் பிடிக்கும்” என கேட்க அவளோ முறைத்தாள்

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.