Page 18 of 21
”மறக்கற அளவுக்கு இதுல என்ன இருக்கு ஒரு சாதாரண புடவை அவ்ளோதானே”
”இதை நீங்க மாதவிக்காக எடுத்து தந்தது, உங்க பிறந்தநாளுக்கு கட்டிக்க சொல்லி கொடுத்தீங்களே மறந்துட்டிங்களா“
”ஓஹோ அதுவா இது அட ஆமாம் இப்பதான் ஞாபகத்துக்கு வருது, அடடே சூப்பர் கலரு புடவை நல்லாயிருக்குல்ல ஆமா இதை அவள் கட்டினாளா இல்லையா”
”கட்டவேயில்லை இந்தாங்க பிடிங்க” என சொல்லி அவனிடமே தந்தாள்
”ஆமா இது ஏன் நீ வைச்சிருக்க”
”நான் ஒண்ணும் வைச்சிக்கலை அவள்தான் கொடுத்தா”
”உனக்கு கொடுத்தாளா”
”ஆமாம்”
”நான் தந்த புடவையை உனக்கு கொடுத்தாளா”
”அட ஆமாம்பா”
”அப்ப ஏன் என்கிட்ட தர்ற இந்தா இதை நீயே வைச்சிக்க“
”எது நானா நான் இதை வைச்சி என்ன செய்றது”
”இத்தனை நாளும் இதை வைச்சி என்ன செய்த அதையே செய்”
”இப்படி சொன்னா எப்படி”