”யாரோ இல்லை உங்கப்பா, உங்கண்ணன் செய்த பாவம்தான், வீட்டுக்கு வாரிசு வந்தே ஆகனும்ஙகற வெறியில பிறந்த குழந்தைகளை கொன்னவங்களாச்சே” என சொல்ல கலாவதி அதிர்ந்து
”ஏய் என்ன உளர்ற”
”எதுக்கு இப்ப பயப்படறீங்க எனக்கு எல்லா உண்மையும் தெரியும்”
”இல்லை நீ பொய் சொல்ற, யாரோ சொன்ன பொய் கதையை கேட்டு பேசாத”
”பொய் கதையில்லை உண்மை, நடந்ததை நேர்ல பார்த்தவங்க சொன்னாங்க”
”யார் சொன்னது”
என கேட்டதும்தான் தாமதம் மறுநொடியே நாச்சியா ஆண்டாளாக மாறினாள், அதுவரை இளம்பெண் பேசும் மென்மையான குரல் மறைந்து அதிகாரத்தன்மை கொண்ட குரலாக மாறியது
”நான்தான்”
அந்த குரலைக் கேட்டதும் விக்கித்துப் போன கலாவதி, தன் அண்ணன் கையை இறுக்கமாக பற்றினாள்
”அண்ணா என்ன அண்ணா இதெல்லாம்” என கேட்க பொன்முடி நடுக்கத்தில் இருந்தார், தாத்தா ஏற்கனவே இதை போன்ற சம்பவங்கள் கண்டதால் இப்போது மிகத்தெளிவாக இருந்தார்
”ஆண்டாள் வேண்டாம் தேவையில்லாத விசயங்களை கிளறாத, முதல்ல நீ அந்தப் பொண்ணை விட்டு போயிடு, அதான் அந்த பொண்ணுக்கும் நல்லது, இல்லை உன் மேல இருக்கற கோபத்தில உன்னை கொன்ன மாதிரி உன்னால பாவம் அந்த பொண்ணயும் என்