”அப்படியில்லை என் அப்பா அம்மா எனக்கு இந்த உணவுகளை சமைச்சி தந்துதான் வளர்த்தாங்க”
”எது இந்த உணவுகளையா, அதெப்படி அவங்களுக்கு அந்தளவுக்கு வசதி கிடையாதே, இதை என்னால நம்ப முடியலை நீ பொய் சொலற”
”இல்லை நான் உண்மையைதான் சொல்றேன், வேணும்னா நீங்க என் அப்பா அம்மாவை கூப்பிட்டு கேளுங்க” என சொல்லியவள் சட்டென அகத்தியனிடம்
”நீங்க பெரிய தப்பு செய்துட்டீங்க”
”தப்பா என்ன தப்பு“
“என்னை எப்படியோ காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்டீங்க ஆனா, அதனால ஊர்க்காரங்க என் அப்பா அம்மா மேல கோபத்தோட இருப்பாங்களே, பாவம் அவங்க நிலைமை என்னாச்சோ தெரியலையே, எனக்கு பயமாயிருக்கு” என சொல்ல அகத்தியன் புரிந்துக் கொண்டான்
”நான் இதை யோசிக்கலை நீ கவலைப்படாத, நான் இப்பவே போய் உன் அப்பா அம்மாவை இங்க கூட்டிட்டு வந்துடறேன்” என சொல்ல அவள் சரியென தலையாட்ட தாத்தா தடுத்தார்
”அகத்தியா நில்லு அவங்க இங்க வரக்கூடாது, வேணும்னா பணத்தை தந்து அவங்களை எங்கயாவது அனுப்பிடு“
”ஏன் தாத்தா இப்படி சுயநலமா யோசிக்கறீங்க பாவம் அவங்க”
”வேணாம் உன் மனைவி பேச்சைக் கேட்டு ஆடாத”
”நான் என் மனசாட்சி சொல்றதைதான் கேட்டு நடக்கறேன், யார் தடுத்தாலும் சரி நான் அவங்களை கூட்டிட்டு வரத்தான் போறேன்” என திடமாகச் சொல்லிவிட்டு அவன் வெளியேறி