(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

செய்வாங்களா என்ன”

  

”முதல்ல நீ நாச்சியாங்கற அடையாளத்தில இருந்து திருமதி அகத்தியன்ங்கற அடையாளத்துக்கு மாறனும், உனக்கு இந்த வீட்ல இருக்கற உரிமைகள் பத்தி தெரியலை, என்னோட மனைவி நீ, உனக்கு இங்க சகல உரிமைகளும் இருக்கு”

  

”இருந்தாலும் உங்க தாத்தா, உங்க அப்பா, உங்க மாமா”

  

”எதுக்கு அவங்களை இழுக்கற”

  

”அவங்களுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க”

  

”ப்ச் நீ வா சொல்றேன் வா” என அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்

  

அதற்குள் இங்கு

  

”மாமா இதெல்லாம் என்ன, யார் அவள்? அவளை போய் இங்க தங்க வைச்சிக்கிட்டு ஏதோ அகத்தியன் இளகின மனசுள்ளவன், தன்னால யாருக்கும் கஷ்டம் வரக்கூடாதுன்னு நினைச்சி அவளை காப்பாத்தினான், அதுக்காக அவளை இங்கயே வைச்சிக்க முடியுமா முதல்ல அவளை அடிச்சி விரட்டுங்க”

  

”ஆனா இதுக்கு அகத்தியன் ஒத்துக்க மாட்டானே, வீம்பு பிடிக்கறானே“ என பொன்முடி கவலையாகச் சொல்ல அதற்கு அங்கமுத்து

  

”எந்நேரமுமா அகத்தியன் அவள்கூட இருப்பான், அவன் இல்லாத சமயம் இவளை விரட்டினாலும் சரி சாகடிச்சாலும் சரி  யாருக்கென்ன தெரியப் போகுது, அகத்தியன் கேட்டா கூட பயந்துப்போய் எங்கயோ ஓடிட்டாள்ன்னு சொல்லிட வேண்டியதுதானே” என சொல்ல தாத்தாவோ

  

”அவளைப் பார்க்கறப்ப என் நெஞ்சே கொதிக்குது, என் உயிரை வாங்கவே வந்திருக்கா, அவள்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.