(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

செய்யச் சென்றார்கள். அவளின் பேச்சைக் கேட்ட பொன்முடியோ

  

”என்னது அசலா என்ன சொல்ற நீ”

  

”ஆமாம் நான் இருக்கறப்ப அந்த போட்டோ எதுக்குங்கறேன், அப்படியே பாட்டி நினைப்பு யாருக்காவது வந்தாலும் என் முகத்தை பார்த்தா போதுமே அதுக்கு சொன்னேன்”

  

என சொல்ல அதைக்கேட்ட தாத்தா அரண்டார், உடனே அவளை விரட்டவும் செய்தார்

  

”நீ இருக்காத போயிடு இங்கிருந்து போயிடு, உன்னைப்பார்த்தா எனக்கு ஆண்டாள் நினைவுதான் வரும், தேவையில்லை எனக்கு அவள் நினைவு வரக்கூடாது அவள் ஞாபகம் வரக்கூடிய எந்த பொருளும் இங்க இருக்க கூடாது, முதல்ல நீ இங்க இருக்கவே கூடாது, போ இங்கிருந்து போ” என கத்த நாச்சியாவும்

  

”சரி நான் இருக்கறது உங்க எல்லாருக்கும் கஷ்டமாயிருந்தா நான் போறேன்” என இரு சொட்டு கண்ணீர் விட்டு அகத்தியனை ஏக்கமாக பார்த்துவிட்டு ஒரு அடி எடுத்து வைக்க உடனே அகத்தியன் வந்தான்

  

”அவள் ஏன் போகனும், அவள் என் மனைவி திருமதி அகத்தியன் இங்கதான் இருப்பா” என உறுதியாகச் சொல்ல மொத்த குடும்பமே அவனை எதிரியாக பார்த்தது. அவனின் முடிவை மாற்ற அவரவர்கள் படாத பாடு பட்டு தொண்டை கிழிய கத்தி பேசியும் பிரயோசனமில்லை, அவன் நாச்சியாவின் கையை பற்றிக் கொண்டான்

  

”நானும் இவளும் கணவன் மனைவியா வாழப்போறோம், இதை தடுக்க யாராலும் முடியாது” என உறுதியாகச் சொல்லிவிட்டு அவளை கைபிடித்து அழைத்துக் கொண்டு கடகடவென தன் அறைக்குச் சென்றான். அவனின் செயலைக் கண்ட மற்றவர்கள் விக்கித்து நிற்க வீட்டு வேலையாட்கள் மட்டும் புன்னகைப் பூத்தார்கள்.

  

அகத்தியன் தன் அறைக்குள் நாச்சியாவை அழைத்து வந்து அங்கிருந்த படுக்கையில் அமர வைத்தான்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.