(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”உங்களுக்காகத்தான்”

  

”எனக்காகவா”

  

”ஆமாம் நீங்க என்னோட கணவர், என்னோட வாழ்வும் சாவும் உங்களோடதான்” என சொல்ல அகத்தியனுக்கு சங்கடமாக இருந்தது

  

”என்னை தப்பா நினைக்காத நாச்சியா உன்னை காப்பாத்தறதுக்கு எனக்கு வேற வழி தெரியலை, அதனாலதான் உன்னை கல்யாணம் செய்துக்கிட்டேனே தவிர மத்தபடி இந்த கணவன் மனைவிங்கற பந்தத்துல வாழ எனக்கு விருப்பம் இல்லை” என சொல்லவும் இதை நாச்சியா எதிர்பார்த்ததுதான், அதற்காக அப்படியா சரி நண்பர்கள் போலவே வாழ்வோம் என வசனம் பேசவும் அவள் தயாராக இல்லை சட்டென கண்கள் கலங்கி கண்ணீருடன்

  

”அப்படின்னா அப்படின்னா இந்த கல்யாணத்துக்கு எந்த அர்த்தமும் இல்லையா இதைதான் உங்கப்பாவும் சொன்னாரு, உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட விருப்பமில்லையா? இதைதான் உங்க மாமாவும் சொன்னாரு, என்னை காப்பாத்த மட்டுமே இப்படியொரு உறவை உருவாக்கினீங்களா, இது நிலைக்காதுன்னு உங்க தாத்தா சொன்னாரு, அவ்வளவு பேர் சொன்னதும் நிஜமாயிடுச்சி, இதுக்கு நீங்க என்னை காப்பாத்தாமலே இருக்கலாம், என் வாழ்க்கை எப்படியோ நாசமா போயிருந்திருக்கும், அதை விட்டுட்டு எனக்கு இப்படியொரு தண்டனையை தந்துட்டீங்களே, கல்யாணம் ஆகியும் உங்க மேல உறவு கொண்டாட முடியாது, உரிமை பாராட்ட முடியாது, இந்த விசயம் வெளிய தெரிஞ்சா என்னாகும், எல்லாரும் என்னை தப்பா நினைப்பாங்க, வெறும் சொத்துக்காகதான் உங்களை நான் மயக்கிட்டேன்னு நினைப்பாங்க, ஆக உங்களால எனக்கு மறுபடியும் அவப்பெயர் வரப்போகுது, மறுபடியும் ஊர்க்காரங்க ஊரை கூட்டி பஞ்சாயத்து வைச்சி என்னை ஊருக்கு நேர்ந்துவிடப்போறாங்க, அப்ப என்னை காப்பாத்த யாரும் வரப்போறதில்லை, ஊருக்குள்ள இருக்கற ஆம்பளைங்க என் வாழ்க்கையை சீரழிக்கப் போறாங்க, இப்படி ஒரு நிலைமை எனக்கு வர்றதுக்கு பேசாம நான் இப்பவே சுமங்கலியா திருமதி அகத்தியன்ங்கற அடையாளத்தோட இறந்துடலாம், அதுதான் சரி, இப்பவே நான் சாகப்போறேன்” என அவள் அழுகையுடன் விரக்தியுடன் பேசுவதைக் கேட்டதும் அகத்தியன் இறங்கி வந்தான்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.