பார்த்தாள் நாச்சியா அவன் சென்றுவிட்டதை அறிந்து மென்மையாகச் சிரித்தாள்.
அகத்தியன் அவசரமாக ஆண்டாள் நாச்சியா போட்டோ இருந்த இடம் வந்தான். அந்த போட்டோவையே உற்றுப் பார்த்தான். போட்டோவில் இருக்கும் பாட்டி இப்போது இருக்கும் நாச்சியா வயதில் இருந்திருந்தால் சந்தேகமில்லாமல் இருவரும் ஒன்று போலதான் இருக்கிறார்கள் அது எப்படி என பலமாக யோசிக்க அதே நேரம் வீட்டுக்கு வெளியே அரவம் கேட்கவும் என்னவென போய் பார்க்கலானான்.
தாத்தா சங்கமேஸ்வரனும் அப்பா பொன்முடியையும் அழைத்து வந்திருந்தார்கள் அங்கமுத்துவும் கலாவதியும், ரூபாவதி முதல் ஆளாக வீட்டிற்குள் ஓடிவந்து ஆரத்தி கரைத்து எடுத்துக் கொண்டு சென்று வந்தவர்களுக்கு ஆரத்தி எடுத்து முடிக்க மற்றவர்கள் வீட்டிற்குள் வந்தார்கள். வந்தவர்களை வரவேற்றான் அகத்தியன்
”வாங்க தாத்தா வாங்கப்பா இப்ப எப்படியிருக்கீங்க பரவாயில்லையா” என கேட்க அவர்களும் மெதுவாக தலையாட்டி ஈனமாக
”ம்ம்” கொட்டினார்கள்.
அவர்களை அங்கிருந்த சோபாவில் அமர வைத்தார்கள், அவர்களுக்கு நேராகத்தான் ஆண்டாள் நாச்சியாவின் போட்டோ இருந்தது, அது அவர்களின் கண்ணில் பட்டதும் ஏதோ சூடு பட்டது போல சட்டென எழுந்து நின்றார்கள், அந்த போட்டோவையே இமைக்காமல் பார்த்து இருவருமே சேர்ந்து
”இது இது” என இழுக்க அதைக்கண்ட அகத்தியன்
”ஆண்டாள் நாச்சியா பாட்டி” என்றான் அதைக் கேட்ட அங்கமுத்து அப்போதுதான் அந்த போட்டோவையே பார்த்து அதிர்ந்தார்.
கலாவதிக்கு திக்கென்றது, ரூபாவதி புதிதாக பார்ப்பது போன்று பார்த்தாள்.