அப்படியே ஆண்டாளை போலவே இருக்கா, அந்த முகத்தை பார்க்கறப்பலாம் எனக்கு பழைய நினைவுகள்தான் வருது” என புலம்ப பொன்முடி அதட்டினார்
”அப்பா புலம்பாதீங்க, அமைதியா இருங்க யாருக்கும் தெரியாத விசயத்தை நீங்களா அம்பலப்படுத்தாதீங்க” என்றதும் தாத்தா அமைதியானார். அங்கமுத்துவுக்கு ஆர்வம் தாளவில்லை
”தெரியாத விசயமா என்ன விசயம் மச்சான்“ என கேட்க பொன்முடி திணறினார்
”அதுவா அது பழைய கதை, இப்ப எதுக்கு விடுங்க, இப்ப இருக்கற பிரச்சனையை சரிகட்டுங்க, அவளை எப்படியாவது விரட்டுங்க அதான் நம்ம எல்லாருக்கும் நல்லது” என சொல்லி முடிக்கவும் அவ்விடத்திற்கு அகத்தியன் நாச்சியாவை அழைத்து வர சரியாக இருந்தது
”எப்ப பாரு உங்களுக்கு அவளை விரட்டறதே நினைப்பா இருக்கும்போல, உங்களை நம்பி இவளை எப்படி இங்க தங்க வைக்கறதுன்னு தெரியலை, இவளை நீங்க சாகடிச்சாலும் சாகடிப்பீங்க, அந்தளவுக்கு சாதி வெறிபிடிச்சி அலையறீங்க கொஞ்சம் கூட உங்களுக்கு மனிதாபிமானமே இல்லை” என திட்ட கலாவதியோ
”அகத்தியா பார்த்து பேசு, நீ யார்கிட்ட பேசறேன்னு தெரியுதா”
”ஓ நல்லாவே தெரியுது வெறிபிடிச்ச மிருகங்கள் கிட்டன்னு“
”அகத்தியா” என தாத்தா உரக்க கத்த, சட்டென நாச்சியா அகத்தியன் முன் வந்து நின்று கைகூப்பி
”எனக்காக நீங்க அவரை பகைச்சிக்க வேண்டாம், இப்ப உங்களுக்கு என்ன நான் இங்கிருந்து போகனும் அதானே இதோ இப்பவே நான் இங்கிருந்து போயிடறேன்” என சொல்ல அகத்தியன் விடவில்லை
”நாச்சியா என்ன பேசற நீ இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன், நீ எங்கயும் போகக் கூடாது, இதுதான் உன்னோட வீடு” என சொல்லியவன் சத்தமாக அனைத்து வேலையாட்களையும்