அழைத்தான். அவர்கள் முன்னிலையில் நாச்சியாவை நிப்பாட்டி
”இந்த வீட்ல எனக்கு எந்தளவுக்கு உரிமை அதிகாரம் இருக்கோ, அதே அளவு உரிமை அதிகாரம் இவளுக்கும் இருக்கு, இவள் இந்த வீட்லதான் இருப்பா, யார் நினைச்சாலும் இவளை விரட்ட முடியாது, அப்படியே விரட்ட முயற்சி செய்தாலும் நீங்கதான் இவளுக்கு பக்க பலமா இருக்கனும், இவள் என்ன கட்டளையிட்டாலும் அது செய்யனும் மறுக்க கூடாது, எனக்கு தந்த மரியாதையை போலவே இவளுக்கும் தரனும் புரியுதா” என சொல்ல அனைத்து வேலையாட்களின் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி, தலையை பலமாக ஆட்டி ஒட்டு மொத்தமாக நாச்சியாவைப் பார்த்து சின்னம்மா என அழைக்க அவளுக்குள் பரவசம் தோன்ற அகத்தியனை பார்த்து புன்னகைத்தாள்.
அந்த சின்ன புன்னகை அவனது மனதை கவர்ந்தது.
அவனது பேச்சைக் கேட்ட தாத்தா, அப்பா, அத்தை மூவருக்கும்தான் கோபம் தலைக்கேறியது, இதில் ரூபாவதியோ தன் தாயிடம்
”என்னம்மா நீ சின்ன வயசில இருந்து அத்தான்தான் என் புருஷன்னு சொல்லி சொல்லி ஆசை காட்டி வளர்த்துவிட்டீங்க ஆனா, இப்ப எல்லாமே மாறிடுச்சி, இப்ப என் நிலைமை என்ன சொல்லுங்கம்மா” என கேட்க கலாவதியோ தன் மகளின் அழுகைக்கு பதில் சொல்லத் தெரியாமல் தன் தந்தையைப் பார்க்க அவரோ கைகளைப் பிசைந்தார் பொன்முடி மாத்திரம் ரூபாவதியிடம்
”ரூபாவதி கவலைப்படாத கொடுத்த வாக்கை காப்பாத்தறதுதான் இந்த வீட்டு வழக்கம், நிச்சயம் உனக்கும் என் மகனுக்கும் கல்யாணம் நடக்கும்“
”ஆனா நாச்சியா குறுக்க இருக்காளே”
”எத்தனை நாள் இருப்பா பார்த்துக்கலாம், என்மேல நம்பிக்கை வை அழாத” என சொல்ல ரூபாவதிக்கும் கலாவதிக்கும் நிம்மதியாகிப் போனது, எது எப்படியோ சொத்து கைநழுவி போகாது என்ற சந்தோஷத்தில் மிதந்தான் அங்கமுத்து.