”நான் என்ன செய்றது அவர் எதுவும் சொல்லாதப்ப, நான் என் வாழ்க்கையை பார்க்கறதுதானே நல்லது”
”என்ன விளையாடறியா போதும் நீ பேசினது, கிளம்பு என்கூட வா இப்பவே உன்னையும் வேங்கையனையும் சேர்த்து வைக்கிறேன்”
”நான் வரலை”
”ஏன் வரலை”
”எனக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் நடக்கப் போகுது, இப்ப போய் நான் எப்படி வர்றது”
”வா இதுல என்ன தப்பிருக்கு, எத்தனையோ கல்யாணம் மண்டபத்திலயே நின்னுப் போயிருக்கு, இன்னும் நீங்க கல்யாண பத்திரிகையே யாருக்கும் தரலைல்ல, அப்புறம் என்ன, சட்டுன்னு கல்யாணத்தை நிப்பாட்டிட்டு என்கூட ஊருக்கு கிளம்பு சீக்கிரம்” என அதட்ட மஹதி ஒப்புக் கொள்ளவில்லை
”இல்லை ஜானு நான் வரலை”
”ஏன்”
”வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன் மறுபடியும் வேண்டி போய் ஏமாற நான் தயாராயில்லை, அவரா வந்தா பார்க்கலாம் நானா போய் அவர்கிட்ட நிக்க மாட்டேன்”
”இல்லை மஹதி நான் சொல்றது”
”எனக்கும் தன்மானம் இருக்கு, ஒவ்வொரு முறையும் அவருக்காக நான் அவமானப்படனுமா என்னால முடியாது ஜானு” என சொல்ல அதற்கு மேல் யாரும் பேசவில்லை மூர்த்தியோ