மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 03 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“சாரி ப்ரியம்வதா! என்ன இருந்தாலும் நீ என் கிட்ட சொல்லி இருக்கனும்,” என்றப் போது வினாயக்கின் குரலும் மாறுப்பட்டு தான் ஒலித்தது!
ப்ரியம்வதா மறுப்பாக தலை அசைத்தாள்!
“அந்த டாபிக் வேண்டாம், விடு வினாயக். இப்போ தான் நாங்க எல்லோரும் அதிர்ச்சில இருந்து வெளியே வந்துட்டு இருக்கோம். சரி, உன் கேஸை ஜெயிச்சதுக்கு எனக்கு ட்ரீட் தர மாட்டீயா?”
“உன் கிட்ட ஒரு உண்மையை சொல்லட்டுமா ப்ரியம்வதா? என் கிட்ட ஒரு பைசா கூட இல்லை. என்னோட வீடை வித்து தான் இந்த கேஸ் நடத்த வக்கீலுக்கு காசு கொடுத்தேன். இப்போ சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ் கார்பொரேஷனுக்கும் அதை வச்சு தான் பணம் கட்டி இருக்கேன். இவ்வளவு நாளா ஒரு ஃப்ரென்ட் கூட தங்கி இருந்தேன். அவனுக்கு கல்யாணம் ஆகப் போகுது. எனக்கும் என் சைபோர்குக்கும் தங்க இப்போ இடமே இல்லை!”
“என்ன இப்படி சொல்ற?”
“என்னை பத்தி உனக்கு தெரியும் ப்ரியம்வதா. இனிமேல தான் அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்கனும். இதெல்லாம் தற்காலிக நிலைமை தான். என் சைபோர்க் பார்த்தா நீ அசந்துப் போயிடுவ. அதுக்கு என்ன எல்லாம் டேலன்ட் இருக்கு தெரியுமா? மனுஷங்களால செய்ய முடியாத, செய்ய ஆபத்தான எத்தனையோ இடத்துல இதை பயன்படுத்தலாம். நான் இதை பப்ளிக்கா அனவுன்ஸ் செய்த உடனே என்ன எல்லாம் நடக்க போகுதுன்னு பாரு!”
“அதை விடு. முதல்ல எங்கே தங்குவேன்னு யோசி. ரோட்ல நின்னா ரிசெர்ச் செய்வ? நான் ஒரு ஐடியா சொல்றேன், என்னோட எங்க ஊருக்கு வா வினாயக். எங்க எஸ்டேட்லயே அவுட் ஹவுஸ் இருக்கு. பெருசா இருக்காது. ஆனா உனக்கும் உன்னோட அன்பு சைபோர்குக்கும் சரியா இருக்கும். நீ வேற கேஸு, அது இதுன்னு சுத்தி பைத்தியமா இருக்க!” சொன்ன பிறகு தான் ப்ரியம்வதாவிற்கு அவள் செய்த தவறு புரிந்தது. வினாயக்கின் முகமும் கருத்துப் போனது.