இருக்கும்னு விளக்கமா சொல்லி புரிய வச்சு ப்ராஜக்ட்க்கு அப்ரூவல் வாங்கினேன்.”
“நல்லதை நினைச்சு ஆரம்பிச்ச விஷயம் எப்போவும் தப்பா முடியாது. எல்லாம் நல்லா நடக்கும்.”
“நன்றிம்மா. நானும் அந்த நம்பிக்கைல இருக்கேன்!”
”நீங்க சொன்னதை எல்லாம் உங்க சைபோ செஞ்சா அது செத்துப் போயிடாதா?”
“இல்லம்மா. சைபோர்க் மேல இருக்க தோல் அதிக வெப்பத்தை தாங்குற ரப்பரால செய்தது. அதனால, தீ, வெடிக்குண்டு எல்லாம் அதை ஒன்னும் செய்யாது. அது மூச்சு விடாது அதனால விஷ வாயுவும் ஒன்னும் செய்யாது. சென்சார் இருக்குறதால அப்படி விஷ வாயு ஏதாவது கசிஞ்சா கூட உடனடியா கண்டுப்பிடிச்சு அலர்ட் கொடுக்கும்!”
“ஹம்மாடியோ, இவ்வளவு செய்யுமா! நீங்க சொல்றதைக் கேட்கும் போது நல்லா தான் இருக்கு!”
“சீக்கிரமே இது நிஜமும் ஆக போகுதும்மா. எத்தனையோ நாடுகள்ல இது மாதிரியான ரோபோ, சைபோர்க்ன்னு உற்பத்தி செய்ய ஆரம்பிச்சுடட்டாங்க.”
ப்ரியம்வதா இப்போது கலைவாணியையும் வினாயக்கையும் பேச விட்டு அமைதியாக இருந்தாள். வினாயக் கலைவாணியுடைய கேள்விகளை பொருட்படுத்தாது விட்டு விடாமல் பொறுமையாக விளக்கம் கொடுத்து பேசியது அவளுக்கு பிடித்தது.
ஆனால் இவர்களும் அந்த ‘மொக்கை’ சைபோர்க் பற்றியா பேச வேண்டும்????!!!!
ப்ரியம்வதாவை பொறுத்த வரை அவளுடைய ரகசிய காதலுக்கு எதிரி இந்த சைபோர்க் தான்.
ஒன்று அந்த சைபோர்க் பற்றி வினாயக் ஆசைப் படி அனைவருக்கும் தெரியுமாறு அறிவிப்பு வெளியாகி வர வேண்டும்.