(Reading time: 7 - 14 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

  

“அம்மா?” ப்ரியம்வதா கலைவாணியின் வாயை அடைக்க முயன்றாள். ஆனால், வினாயக் இப்போதும் ஒரு பதற்றமும் இல்லாமல் பதில் சொன்னான்.

  

“வித்தியாசம்னு இல்லம்மா. நான் பார்த்துட்டு இருந்த வேலை அப்படி. நான் செய்ற சைபார்க் வச்சு மனுஷங்களுக்கு கஷ்டமா இருக்க வேலைகளை செய்ய வைக்கலாம். நமக்கு பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் ரோபோ, சைபோர்க்ன்னு எல்லாத்தையும் பழகிக்க தான் வேணும். அது தான் எதிர்காலம்.”

  

“அதென்ன ரோபோ? சைபோ??” என அடுத்தக் கேள்வியைக் கேட்டாள் கலைவாணி.

  

“ரோபோ'ங்குறது இயந்திர மனிதன். பொதுவா சைபோர்க்னா உயிரோடு இருக்க மனுஷங்க, விலங்குன்னு எது கூடவாவது கூடுதல் திறமைக்கு இயந்திரங்கள், மெஷின்னு சேர்த்து இருக்குறது!”

  

“அப்போ நீங்க மனுஷனை பிடிச்சு இதை செஞ்சுட்டு இருக்கீங்களா?”

  

“இல்லம்மா. நான் பார்க்க மனுஷன் மாதிரியே இருக்குறதா சைபோர்க் செய்திருக்கேன். நிறைய பேர் இப்படி இருந்தா ஹ்யூமனாய்ட் ரோபோன்னு சொல்வாங்க. என் சைபோர்க் அந்த மாதிரி. இருந்தாலும் மனுஷங்க மாதிரி பழக, நடவடிக்கைகள் இருக்க மாதிரியும் செய்திருக்கேன். அதான் நான் சைபோர்க்ன்னு சொல்றேன்.”

  

“இதுல இவ்வளவு விஷயம், வித்தியாசம் இருக்கா. எப்படி உங்களுக்கு இதுல ஆர்வம் வந்தது?”

  

“பேப்பர்ல படிச்ச நியூஸ் தான் காரணம். பல பல வருஷங்களுக்கு முன்னாடி போர் காலத்துல புதைச்சு வச்ச கண்ணிவெடில சிக்கி அப்பாவி மக்கள் இறக்குறதா படிச்சபோ முதல் முதலா அந்த குண்டை எல்லாம் எடுக்க இப்படி ஒன்னு செய்யனும்னு யோசிச்சேன். அப்புறம் சாக்கடைல இறங்கி விஷ வாயு தாக்கி இறக்குற தொழிலாளர்கள் பத்தி தெரிய வந்தப்போ செய்தே தீரனும்னு முடிவு செய்தேன். சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ் எம்.டி., சேர்மென் இரண்டு பேர் கிட்டப் பேசி, இது மாதிரி சைபோர்க்க்கு எதிர்காலத்துல எந்த அளவுக்கு டிமான்ட்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.