இப்ப பிடிக்காத கல்யாணத்துக்கு வீம்புக்குன்னு சம்மதம் சொல்லி கல்யாண ஏற்பாடுகளை செய்ய சொன்னா, வர்ற முகூர்த்தத்தில மஹதிக்கு கல்யாணம் தெரியுமா உனக்கு”
”என்னது கல்யாணமா சத்தியமா எனக்குத் தெரியாது ஆன்ட்டி“
”கல்யாணம் ஆனதும் அவள் லண்டனுக்கு போயிடப் போறா”
”எது லண்டனா அப்ப வேங்கையன்”
”என்ன வேங்கையன் அவன்தான் இவளை விட்டுட்டானே”
”பொய் இதை நான் நம்ப மாட்டேன் கோர்ட்ல விவாகரத்துக்கு நின்னப்ப ஜட்ஜ் முன்னாடியே சின்ன மருமகளை தேடிப் போய் அவளை கல்யாணம் செய்துக்கப் போறதா சொன்னாரு”
”என்ன உளர்ற”
”இதுதான் உண்மை, எனக்கும் அவருக்கும் விவாகரத்து வரனும்னு காத்திருந்தோம், வந்தது உடனே நான் மூர்த்தி மாமாவை கல்யாணம் செய்துக்க முடிவு எடுத்தேன், அதுக்கான ஏற்பாடுகள் கூட நடக்குது, அதே போல வேங்கையனும் மஹதியை கல்யாணம் செய்துக்கப் போறதா சொல்லிட்டு கிளம்பிப் போனாரு, திரும்பி வந்தப்ப நீங்க யாரும் இங்க இல்லை ஊருக்கு போயிருக்கறதா சொன்னாரு” என சொல்ல அதைக்கேட்டு சாந்தி குழம்ப மகேந்திரன் தெளிந்தார்
”அதெல்லாம் பொய் நடந்ததே வேற” என நடந்ததை சொல்ல அதைக்கேட்டு ஜானகி அதிர்ந்தாள்
”மஹதி எங்க அங்கிள்”
”அவள் ரூம்ல இருக்கா”