”லண்டனா” என சாந்தி அலற
”ஆமாம் நான் அங்க இருக்கற ஆஸ்பிட்டல்லதான் வேலை செய்றேன், கல்யாணம் ஆனதும் மஹதியை கூட்டிட்டுப் போயிடுவேன்னு ஏற்கனவே நான் சொல்லிட்டேனே” என மகேந்திரனைப் பார்த்துச் சொல்ல மகேந்திரனோ வசமாக மாட்டிக் கொண்டார்
”சரி சரி இதைப்பத்தி அப்புறம் பேசலாம் பாவம் மஹதி சோர்வா இருக்கா எதுவாயிருந்தாலும் பேசிட்டு போன்ல தகவல் சொல்றோம் இப்ப நீங்க கிளம்புங்க” என சாந்தி சொல்ல அதற்கு பாஸ்கரனும் அவனது பெற்றோர்களும் ஒப்புக் கொண்டு கிளம்பிச் சென்றார்கள்.
அவர்கள் சென்றதும் மஹதி தன் தந்தையிடம்
“என்னப்பா இதெல்லாம் அவர் என்னடான்னா லண்டன்னு சொல்றாரு”
”ஆமாம்மா நீ இங்க இருக்க வேணாம் கல்யாணம் ஆனதும் புது வாழ்க்கை ஆரம்பிக்கறப்ப புது இடத்தில ஆரம்பிச்சா நல்ல மன மாற்றம் ஏற்படும், உனக்கும் உன் வாழ்க்கை அழகா மாறிடும், நீயும் யாரை பத்தின எண்ணமும் இல்லாம உன் புருஷன் கூட சந்தோஷமா வாழலாம்னு நினைச்சிதான் இந்த வரனை தேடிப்பிடிச்சேன்” என சொல்ல சாந்தி ஒப்புக் கொள்ளவில்லை
”முடியாதுங்க இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன், ஒரே பொண்ணு அவளை கடல்தாண்டி கல்யாணம் செய்து வைச்சி அனுப்பிட்டா அப்புறம் அவளை எப்படி நான் பார்க்கறது”
“வீடியோ கால்ல பாரு“
”என்ன விளையாடறீங்களா, இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் அடிக்கடி அவளை போய் பார்க்கற மாதிரி ஒரு இடமா பாருங்க“
”வேணும்னா வேங்கையனை பார்க்கட்டுமா” என சட்டென மகேந்திரன் சொல்ல சாந்தி முகம்