(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

“போனா மட்டும் என்னடி ஆகப் போகுது, அதான் ஜானகிக்கும் மூர்த்திக்கும் கல்யாணம் ஆகுதே“

  

”அது கூட பொய்யா இருக்கலாம்மா, யார் கண்டா அவருக்கு என்னை பிடிக்கலை அம்மாவுக்காக வந்தாரு, எதையாவது சொல்லனும்னு இதை சொல்லிட்டுப் போறாரு, அவ்ளோதான்மா அவர் மனசுல நான் இல்லை” என சொல்ல சாந்திக்கு என்ன சொல்வதென தெரியாமல் தன் கணவரை பாவமாக பார்க்க மகேந்திரனோ

  

”பொறு சாந்தி எதுக்கும் நான் வீரசிங்கத்துக்கிட்டு பேசிப்பார்க்கிறேன்” என சொல்ல அதற்கு மஹதியோ ஒப்புக் கொள்ளவில்லை

  

”வேணாம்பா நான் முடிவு செய்துட்டேன் நீங்க எனக்கு பார்த்த அந்த டாக்டர் மாப்பிள்ளையே போதும் நான் அவரையே கட்டிக்கிறேன், லண்டனுக்கும் போறேன் கல்யாணத்துக்கு ஆக வேண்டிய ஏற்பாடுகளை செய்ங்க”

  

”அவசரப்பட்டு முடிவு எடுக்காத மஹதி”

  

”இல்லைப்பா நான் தெளிவாதான் இருக்கேன், போதும் ஒவ்வொரு முறையும் நான் வேங்கையனை நம்பி ஏமாற முடியாதுப்பா”

  

”சரிம்மா உன் விருப்பம், நான் கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பிக்கிறேன்” என சொல்ல சாந்தியோ துடித்துப் போக அவரை சமாதானப்படுத்தினார். மஹதிக்கு இதில் விருப்பமில்லைதான் ஆனாலும் விதியே என தன்னையே சமாதானம் செய்துக் கொண்டாள்.

  

மஹதியின் வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் படு வேகமாக நடந்துக் கொண்டிருந்தது, ஒரு வாரத்திற்கு பின் ஜானகி மூர்த்தியுடன் மஹதி வீட்டிற்கு வந்தாள், அவள் வந்த நேரம் திருமண பத்திரிகையை பார்த்துக் கொண்டிருந்தார் மகேந்திரன்

  

”மஹதி மஹதி” என அழைத்தபடி வந்தாள் ஜானகி, அவளைக்கண்டதும் குழம்பினார்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.