ஓடவில்லை, அவள் கோவலனுக்காக அழுதாள் அவளுக்கு துணையாக யாரும் இல்லை. இரவு முழுவதும் கோவலனை நினைத்து தூங்க மறந்தாள்.
மறுநாள் பொழுது விடிந்ததும் கண்ணகி ரெடியாகி வெளியே வர அங்கு மாதவி நின்றிருந்தாள், அவளைக்கண்டதும் கண்ணகிக்கு உயிரே வந்தது போலானது, ஓடிச் சென்று அவளை கட்டியணைத்துக் கொண்டாள்
இரு பெண்களுமே அழுதார்கள் கோவலனை நினைத்து. மாதவியே கண்ணகியை தேற்றினாள்
”அழாத கண்ணகி, அழறதால எதுவும் மாத்த முடியாது, அதுக்கு பதிலா கோவலனை எப்படி காப்பாத்தறதுன்னு யோசிக்கலாம்” என சொல்ல கண்ணகியோ மாதவியிடம்
”அவர் கொலை செய்யலை மாதவி”
”எனக்குத் தெரியும் கண்ணகி“
”தெரியுமா எப்படி”
”எல்லாம் என்னாலதான்”
”புரியலை ஆமா நீ எப்படி இங்க வந்த ஓ நியூஸ்ல செய்தியை பார்த்துட்டு வந்தியா”
”ஆமாம் கண்ணகி சிலம்புவை கொன்னது கோவலன் இல்லை அது எனக்கு உறுதியா தெரியும்”
”அப்ப அவனை யார் கொன்னது”
”தெரியலை”
”எனக்கு தலையே சுத்துது மாதவி”
”நீ வா உன்கிட்ட நான் ஒரு விசயம் சொல்லனும் முக்கியமானது வா” என அவளை அறைக்கு