“ஆமாம் எனக்காகதானே அவர் சிலம்புவை அடிச்சாரு, அப்ப நான்தானே அவருக்கு பதிலா ஜெயிலுக்கு போகனும்”
”பைத்தியம் மாதிரி உளறாத யாரும் ஜெயிலுக்கு போக வேணாம் முதல்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கலாம்”
”காலேஜ் எப்படி நடக்குது“
”நல்லாதான் நடக்குது ஆனா இந்த கொலை விசயம் தெரிஞ்சி காலேஜ்க்கு கெட்ட பெயர் வராம இருந்தா சரி”
”எப்படியாவது கோவலனை காப்பாத்திடனும் கண்ணகி” என மாதவி கெஞ்ச கண்ணகியும்
”கண்டிப்பா என் உசுரை கொடுத்தாவது நான் அவரை காப்பாத்தி உன்கிட்ட ஒப்படைப்பேன்”
”கண்ணகி” என அவள் அதிர்ச்சியில் அலறினாள்
”அவர் மனசுல என்னால இடம் பிடிக்க முடியலை மாதவி”
“சே என்ன சொல்ற நீ, ஊட்டியில என்கூட இருந்தப்ப கூட காதல் கீதல்ன்னு சொல்லிக்கிட்டு என் பக்கமே வரலை தெரியுமா, கண்ணகியை தனியா விட்டுட்டு வந்துட்டேன், தகவல் வேற சொல்லலை, என்னை நினைச்சி பயந்திருப்பா, ஊருக்கு போனதும் சண்டைக்கு நிப்பா, அவளை வேற நான் சமாதானம் செய்யனும்னு இருந்த ஒரு வாரம் முழுக்க உன்னைப் பத்தியேதான் பேசினாரு, என்கிட்ட கூட அவர் நெருங்கலை, கண்ணியமா நடந்துக்கிட்டாரு, சிலம்புவால எனக்கு இனி பிரச்சனை வராதுன்னு நம்பிதான் அவர் ஊருக்கே கிளம்பி போனாரு, அவர் மனசுல நான் இல்லை கண்ணகி நீதான் இருக்க” என சொல்ல கண்ணகிக்கு அப்படியொரு மகிழ்ச்சி.
”கண்ணகி நேரமில்லை வா போலாம்” என அழைக்க கண்ணகியும் உடனே கிளம்பினாள்.