”கண்ணகி நீ தைரியசாலி, புத்திசாலியும் கூட, நீயா இப்படி உடைஞ்சிப் போய் அழறது, உன்னை நம்பிதானே நான் இருக்கேன் எப்பேர்ப்பட்ட பிரச்சனையையும் சர்வ சாதாரணமா முடிக்கற உனக்கு இந்த பிரச்சனை ஒண்ணும் பெரிசில்லை, எனக்கென்னவோ சிலம்பு கொலை விசயத்தில சந்தேகம் இருக்கு, சத்தியமா சொல்றேன் கண்ணகி, அவன் சாகனும்னு நினைச்சி அவனை அடிக்கலை நான் அடிச்ச அடியில அவன் சாகலை, அது மட்டும் எனக்கு உறுதியா தெரியும்
ஆனா எங்கயோ தப்பு நடந்திருக்கு, அதை மட்டும் நீ கண்டுபிடிச்சி என்னை காப்பாத்திடு போதும் இந்த பிரச்சனை முடிஞ்சி நான் நிரபராதின்னு வெளியே வந்தாதானே என்னால மாதவியை கல்யாணம் செய்துக்க முடியும், ப்ளீஸ் கண்ணகி உதவி செய் பாவம் மாதவிக்கு என்னை விட்டா யார இருக்கா சொல்லு, சீக்கிரமா ஆதாரங்களை திரட்டி என்னை காப்பாத்து” என சொல்லிவிட்டு அவன் போலீஸ் வண்டியில் செல்ல கண்ணகியோ மாதவியைப் பார்த்து முறைக்க அவளோ சிரித்தாள்
”அவர் விளையாடறாரு கண்ணகி நம்பாத முதல்ல அவரை காப்பாத்தற வழியை பாரு”
”எப்படி காப்பாத்தறதுன்னு தெரியலையே மாதவி”
”எனக்கும் தெரியலை கண்ணகி பார்த்தியா கோவலனுக்கு எதிரா எவ்வளவு ஆதாரங்களை வைச்சிருக்காங்கன்னு, கோவலன் அடிச்சதால சிலம்பு சாகலை வேற ஏதோ நடந்திருக்கு கொலை பழி கோவலன் மேல விழுந்திருக்கு, எப்படியாவது கோவலனை காப்பாத்தனும்” என சொல்ல கண்ணகி பல கோணத்தில் யோசிக்கலானாள்.
உதயமூர்த்தியோ கண்ணகியிடம் வந்து
”நீ வருத்தப்படாதம்மா, ஆண்டவன் துணையிருக்காரு, கண்டிப்பா கோவலனை காப்பாத்திடலாம் தைரியமா இரும்மா, நான் வக்கீல்கிட்ட பேசிட்டேன், கோவலனுக்கு எதிரா ஆதாரங்கள் நிறைய இருக்கு, நமக்கு சார்பா எதுவும் இல்லை, ஏதாவது வழி கிடைச்சா போதும் கோவலனை காப்பாத்திடலாம்” என சொல்லியவர் மாதவியைப் பார்த்து