”பணம் பத்தும் செய்யும் மாதவி வா உனக்கு காட்டறேன்” என சொல்லி கண்ணகி அழைக்க மாதவி குழப்பத்துடனே சென்றாள்.
பணத்தை வைத்து கண்ணகிக்கு அனுமதி கிடைத்தது, அதுவே மாதவிக்கு ஆச்சர்யத்தை தந்தது
”கண்ணகி நீயா இது, தப்பு செய்யக்கூடாதுன்னு சொல்வ இப்ப நீயே லஞ்சம் தர்ற இது தப்பில்லையா”
”என்ன செய்றது மாதவி நமக்கு ஆதாரம் தேவையாச்சே, தப்பான விசயத்துக்கு பணம் தந்தாதான் அது தப்பு, இது அவசியமான ஒன்னு அதான் பார்க்கிறேன், என்னை நீ தப்பா நினைச்சாலும் பரவாயில்லை வா போய் சிலம்புவோட உடம்பை பார்க்கலாம்” என சொல்லி அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.
மார்ச்சுவரிக்குள் இரு பெண்களும் நுழைந்ததும் பயந்தே விட்டார்கள், அந்த இடம் பிணங்கள் நாற்றம் என அவர்கள் அச்சத்துடனே சென்றார்கள், சிலம்புவுக்கு என தனியாக ஒரு பெட்டி வைத்திருந்தார்கள் அதை திறந்து காட்டினான் அங்கு வேலை செய்பவன், இரு பெண்களும் பார்த்தார்கள் சிலம்புவின் உடம்பு இருந்தது, ஆனால் முகம் சிதைக்கப்பட்டிருக்க அந்த கொடூரத்தைக்கண்டு இரு பெண்களுக்கும் தாங்க முடியாத அளவு சங்கடம் ஏற்பட்டது, அவசர அவசரமாக இரு பெண்களும் வெளியேறி ஆள் இல்லாத இடத்தில் வாந்தி எடுத்தார்கள்.
தங்களை ஓரளவு சமாளித்துக் கொண்டதும் கண்ணகி மாதவியிடம்
”என்னடி இது இவ்ளோ மோசமாவா கோவலன் அவனை அடிக்கனும்”
”இல்லைடி நான்தான் அன்னிக்கு பார்த்தேனே, கோவலன் சிலம்புவை அடிச்சது நிஜம் ஆனா முகத்தில அடிக்கலையே”
”அப்புறம் எப்படி முகம் சிதைஞ்சி போன மாதிரியிருக்கு”
”தெரியலை கண்ணகி பேசாம ஒண்ணு செய்யலாம்”