”சரி சொல்லுங்க என்ன விசயம்“
”அது இருக்கட்டும் ஏதாவது ஆதாரம் கிடைச்சதா”
”அது சம்பந்தமா நாங்க மார்ச்சுவரி வரைக்கும் போய் சிலம்புவோட உடம்பை பார்த்தோம் பார்த்ததுமே வாந்தி எடுத்தோம்”
”ஏன்”
”அவன் முகமே சிதைஞ்சி போயிருக்கு இந்த நிலைமையில அவனைப் பார்த்தா சிலம்பு போலவே தெரியலை சந்தேகமா இருக்கு”
”முகம் சிதைஞ்சிப் போயிருக்கா ஆச்சர்யமா இருக்கே அன்னிக்கு நான் அடிச்சப்ப கூட அவன் முகத்தில கை வைக்கலையே மாதவி”
”அதான் எனக்கும் புரியலை, இதை பத்தி கண்ணகிகிட்ட கேட்டேன் அவளுக்கும் ஒண்ணும் புரியலை ஆனா அவளுக்கு ஏதோ சந்தேகம் இருக்காம்”
”என்ன சந்தேகம்”
“செத்தது உண்மையில சிலம்புதானான்னு”
”எனக்கும் அதே சந்தேகம்தான் இருக்கு இப்ப நீ மார்ச்சுவரி விசயம் சொன்னதும் என் சந்தேகம் ஊர்ஜீதம் ஆயிடுச்சி, மாதவி கண்டிப்பா அந்த உடம்பு சிலம்புவோடது கிடையாது வேற என்னவோ நடந்திருக்கு” என சொல்ல மாதவியோ
”நான் ஒரு யோசனை சொன்னேன் அது கண்ணகிக்கு பிடிக்கலை என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டா”