”என்ன”
”அன்னிக்கு சிலம்புவுக்கும் கோவலனுக்கும் சண்டை நடந்தப்ப நான்தானே இருந்தேன் என்னை சாட்சியா கோர்ட்டுல நிப்பாட்டிடு நான் நடந்ததை சொல்றேன்”
”அப்படி ஒரு விசயம் இருந்தா போன முறை நீ வந்தப்பவே வக்கீல் உன்னை பிடிச்சிருப்பாரே, கோவலன் உன் பேரை வெளிய எடுக்க கூடாதுன்னு நினைக்கறாரு, அதோட நீ போய் நடந்ததை சொன்னா என்னாகும் தெரியுமா, தோண்டி துருவி கேள்வி கேட்பாங்க கடைசியில கோவலன் உன்னை காதலிச்ச விசயம் வரைக்கும் வெளிய வந்துடும், இதனால மானம் போயிடும் உன்னை பத்தி தப்பா பேசுவாங்க, அவர் உன்னை நினைச்சி அமைதியாயிருக்காரு, நீ பாட்டுக்கு அதை புரிஞ்சிக்காம தப்பு செய்யாத”
”இல்லைடி இதுக்கு மேல நமக்கு ஆதாரம் கிடைக்காது அதுக்கு பதிலா நானே போய் சாட்சி சொல்றேனே”
”அப்படியே நீ சொன்னாலும் நம்ப மாட்டாங்க அவங்களுக்கு தேவை ஆதாரங்கள்தான்”
”அதான் இல்லையே இப்போதைக்கு இருக்கற ஒரு சாட்சி நான்தானே”
”நீ பேசினா பல உண்மைகள் வெளிய வரும் தேவையில்லாம உன் மானம் போகும்”
”போனா போகட்டும் கோவலனை காப்பாத்திடலாம்”
”நீ சொன்னதும் அவரை விட்டுட மாட்டாங்க சாதாரண வழக்கு இது இல்லை கொலை பழி விழுந்திருக்கு புரிஞ்சிக்க மாதவி”
”இல்லை கண்ணகி நான் நினைச்சதை செய்யதான் போறேன்”
”அப்ப முதல்ல நீ இதைப்பத்தி அவர்கிட்ட பேசிடு, அவர் சம்மதிச்சா தாராளமா போய் கோர்ட்ல