”அப்படி என்ன யோசிச்சி வைச்ச”
”இருக்கற நாட்கள்ல சரியான ஆதாரம் கிடைக்காம போயிட்டா என்னாகிறது அதுக்கு பதிலா நானே சாட்சி சொல்லிடவான்னு கேட்டேன்”
”சாட்சியா நீயா”
”ஆமாம் அன்னிக்கு சண்டை உருவானது என்னாலதானே, அந்த இடத்தில நானும்தானே இருந்தேன் நடந்ததை கோர்ட்ல சொன்னா பிரச்சனை முடிஞ்சிடும்”
“அறிவிருக்கா உனக்கு”
”ஏன் இப்படி சொல்றீங்க கோவலன்”
”பின்ன நீ சாட்சி சொன்னா மட்டும் என்னை விட்டுடுவாங்களா ஆதாரம் தேவை மாதவி, அதோட நீ சாட்சி சொல்ல வேணாம்”
”ஏன்”
”நீ வந்தா அப்புறம் பல உண்மைகள் வெளிய வரும், அப்ப உன் மானமும் என் மானமும்தான் காத்துல பறக்கும், எப்பவோ நான் உன்னை காதலிச்சதுக்காக இப்ப மானம் போய் ரெண்டு பேரும் வருத்தப்படனுமா, பாவம் கண்ணகி அவள் நிலைமையை நினைச்சிப் பாரு”
”அவளும் இதைதான் சொன்னா ஆனா நான் பிடிவாதமா பேசினதால உங்ககிட்ட பேச கூட்டிட்டு வந்துட்டா”
”சரி நான் சொல்றதை கேளு, இருக்கற பிரச்சனையை சால்வ் பண்ற வழியைப் பார்க்கலாம் அதை விட்டுட்டு நீ உள்ள நுழைஞ்சி இன்னும் பெரிய பிரச்சனையை உருவாக்கிடாத”
”வேற என்னதான் செய்றது”