(Reading time: 22 - 43 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

சரிசமமா, உனக்கு புத்திக் கெட்டுப் போச்சா இது ஒண்ணும் நீ நடத்தற கார்மெண்ட்ஸ் இல்லை, கண்டவங்களை வேலைக்கு வைக்கறதுக்கு, இது என்னோட வீடு, இங்க யார் வரனும், யார் வரக்கூடாதுன்னு முடிவெடுக்க வேண்டியது நான்தான், அது மட்டுமில்ல அவங்க யார் தெரியுமா ஒரு காலத்தில நம்ம வீட்லயே வேலைக்காரங்களா வேலை செய்தவங்க அவங்களை போய் நம்மகூட சரிக்கு சமமா உட்கார வைச்சா, பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க” என பொங்கி எழ அதற்கு அகத்தியன் பதில் சொல்ல முன்வர நாச்சியா தடுத்தாள்

  

”இருங்க நான் அவருக்கு பதில் சொல்றேன்“

  

”இல்லை நாச்சியா உன்னால அவரை சமாளிக்க முடியாது”

  

”முடியும் அவர் பேசறது என் குடும்பத்தைப் பத்திதானே, அப்ப நான்தானே பேசனும்”

  

”ஆனா”

  

”நான் பார்த்துக்கறேன்”

  

”என்னவோ போ அவங்க பேசின பேச்சில எனக்கு இருந்த பசி கூட ஓடிப்போச்சி, தலைக்கு மேல கோபம்தான் நிக்குது, நீ என்ன பேசினாலும் அவங்க பிடிவாதமாதான் இருப்பாங்க, இவங்க பேச்சை கேட்டுக்கிட்டு என்னால சாப்பிட முடியாது நான் என் அறைக்குப் போறேன் அப்புறமா வந்து சாப்பிடறேன்” என சொல்ல அவளோ தடுத்தாள்

  

”இருங்க அவசரப்படாதீங்க நாம எல்லாரும் ஒரு குடும்பம், இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக்கிட்டா பார்க்க நல்லாவாயிருக்கு, இந்த வீடு கோயில் போல, இங்க சந்தோஷம் மட்டும்தான் இருக்கனும், சண்டை சச்சரவு இருக்க கூடாது, அப்புறம் பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க, நான் வந்த நேரம் இந்த வீடே பிரிஞ்சிப் போச்சின்னு நினைப்பாங்க இந்த அவப்பெயர் எனக்கு தேவையா சொல்லுங்க”

  

”சரி நாச்சியா இப்ப நான் என்ன செய்யட்டும் அதைச் சொல்லு“

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.