(Reading time: 22 - 43 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”நீ என் பிள்ளைதான் எனக்கு பிறந்தவன்தான் ஆனா உங்கம்மா வேற”

  

”வேறன்னா புரியலையே அப்ப என் அம்மா ஆண்டாள் நாச்சியா இல்லையா”

  

”இல்ல”

  

”அப்பா”

  

”கத்தாதடா ஆண்டாளுக்கு ஆரம்பத்தில பிள்ளை பாக்கியம் இல்லை, கோயில் கோயிலா சுத்தி வந்தா, ஏகப்பட்ட விரதம் இருந்தா அதுக்கே பல வருஷம் ஓடிடுச்சி, வயசும் ஏற ஆரம்பிச்சது, கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் கழிச்சி அவள் கர்ப்பமானா நாங்க எல்லாரும் சந்தோஷப்பட்டோம் வாரிசு பிறந்தா சொத்தெல்லாம் என் புள்ளைக்கு வரும்னு நினைச்சேன் ஆனா, அந்த சமயம் எங்களுக்கு பெண் குழந்தைதான் பிறந்தது, அந்த விசயம் அவளுக்குத் தெரியாது, எங்க சொத்து கையை விட்டு போயிடுமேன்னு பயந்தேன், அப்ப பிறந்த பெண் குழந்தையை நானே கொல்ல சொல்லிட்டு அதுக்கு பதிலா பிறந்தது ஆண் குழந்தைன்னு எல்லாரையும் நம்ப வைச்சேன்”

  

”அதெப்படிப்பா நம்ப வைக்க முடியும்”

  

”எப்படி சொல்றது சரி வேற வழியில்லை சொல்லித் தொலைக்கிறேன், ஆண்டாளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாம அவள் கோயில் கோயிலா சுத்திவந்தா, அப்ப எங்களுக்குள்ள நிறைய மனஸ்தாபம் வந்தது, அவளுக்கு என்னை பிடிக்காமலே போனது, அந்தச் சமயம் எனக்கு ஆறுதல் தர யாருமில்லை, அப்படியாராவது இருப்பாங்களான்னு பார்த்தப்பதான் இந்த வீட்ல வேலை செய்த ஒரு பொண்ணு என் மேல அன்பு காட்டினா, அந்த அன்புக்கு கிடைச்ச பரிசுதான் நீ”

  

”அப்பா” என அலற

  

”ஷ்ஷ்ஷ் கத்தாதடா அந்நேரம் உங்கம்மாவும் சரி ஆண்டாளும் சரி ஒரே நேரத்தில கர்ப்பமானாங்க, ஒரே நாள்ல பிரசவமும் நடந்தது, இரண்டு குழந்தைகளுமே இந்த வீட்லதான்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.