(Reading time: 22 - 43 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

ஏனோ அவர்களின் அந்த பாசம் அவனுக்கு தேவையாக இருந்தது, அவனது பல வருட ஏக்கம் ஒரு நொடியில் ஓடிவிட்டது போல உணர்ந்தான், உண்மையான தாய் தந்தையின் அன்பு கிடைத்துவிட்டது போல மனம் மகிழ்ந்தான். அந்த மகிழ்வுடனே சாப்பிடலானான்.

  

நாச்சியாவோ தள்ளி நின்று அவர்கள் மூவரின் அன்பு பரிமாற்றத்தைக் கண்டு மெய்சிலிர்த்தாள். அந்த காட்சியைக் கண்டு சங்கமேஸ்வரன் பொங்கினார்

  

”அடச்சே என்ன நடக்குது இங்க, இதை பார்க்கவே சகிக்கலை” என சொல்ல பொன்முடியோ முற்றும் துறந்த முனிவர் போல அமைதியாகப் பேசினார்

  

”இதுல என்னப்பா தப்பு அப்பா அம்மா தன் பிள்ளைக்கு சாப்பாடு வைக்கறாங்க”

  

”என்னடா உளர்ற“

  

”இதுதானேப்பா உண்மை”

  

”டேய் நீயாடா இப்படி பேசறது“

  

”அட போங்கப்பா என்னிக்கு என் பிறப்பை பத்தி தெரிஞ்சிக்கிட்டேனோ, அப்ப அகத்தியனை பத்தி பேச எனக்கு என்ன உரிமையிருக்கு பாவம்பா அவன்“

  

”நிறுத்துடா இதுக்கு மேல பேசி வைக்காத யார் காதுலயாவது விழுந்தா வீண் பிரச்சனை“ என சொல்லிய நேரம் நாச்சியா வந்தாள்

  

”ஆனா என் காதுல விழுந்துடுச்சே” என்றாள் அதைக் கேட்டு சங்கமேஸ்வரன் அதிர்ந்தார் பொன்முடியோ மிரண்டார்

  

”நீ நீ இங்க என்ன செய்ற”

  

”சும்மா இந்த பக்கமா வந்தேன், நீங்க பேசறது காதுல விழுந்ததா சரி நமக்கும் எந்த

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.