வேலையும் இல்லை, பொழுது போக்கலாமேன்னு உங்களோட பேச வந்தேன் ஆமா என்ன கதை பேசிக்கிட்டு இருந்தீங்க ம்ம்ம் ஆஆ ஞாபகம் வந்துடுச்சி அங்க பாருங்களேன் குடும்பமா எப்படி அன்பை பரிமாறிக்கிட்டு சாப்பிடறாங்கன்னு, உங்க பேரனை பாருங்க பல வருஷ ஏக்கத்தை மறந்து எப்படி நிம்மதியா சாப்பிடறாருன்னு, என்னதான் நீங்க அவரை வளர்த்து ஆளாக்கினாலும் பெத்தவங்க பாசமே வேற, அப்பா அம்மா பாசத்துக்கு முன்னாடி உங்களோட பாசம்லாம் கால்தூசுக்கு சமம்”
”வேணாம் தேவையில்லாத பொய்யை பேசாத” என சங்கமேஸ்வரன் கத்த நாச்சியாவோ
”உண்மை உங்க கண்முன்னாடியே இருக்கு, அதை பார்த்தும் பொய்யுன்னு பேச உங்களால மட்டும்தான் முடியும் ஏன்னா உங்க பிறப்பு அப்படி சே உங்களை எப்படித்தான் ஆண்டாள் நாச்சியாவுக்கு பிடிச்சதோ உங்களை நம்பி அவங்க இழந்ததுதான் அதிகம்“
”இதோட நிறுத்திக்க இதுக்கு மேல பேசின”
”பேசினா என்னாகும் இன்னும் சிலபல உண்மைகள் வெளிய வந்துடும்னு பயப்படறீங்களா கவலைப்படாதீங்க, எல்லா உண்மையையும் உடனே சொல்லிட்டா அந்த உண்மைக்கே மதிப்பிருக்காது, அதுவே சரியான தருணத்தில உண்மையை சொன்னா அந்த உண்மைக்கு பலம் அதிகரிக்கும், அதனால நான் சரியான தருணம் வர்றவரைக்கும் உண்மையை சொல்லாம அமைதியா இருக்கேன், தேவையில்லாம என்னை சீண்டி பார்க்காதீங்க, அப்புறம் எனக்கு கோபம் வந்து உங்களோட வரலாறை அலச வேண்டியிருக்கும் பரவாயில்லையா” என சொல்ல சங்கமேஸ்வரன் அதிர்ந்தார்
”வேணாம் வேணாம் என்னோட வரலாறை நீ அலசாத, எனக்கு இப்பவே வயசாயிடுச்சி, இன்னும் எத்தனை வருஷம் நான் உயிரோட இருப்பேன்னு தெரியலை இருக்கற வரைக்குமாவது கௌரவமா வாழ்ந்துட்டு போறேன்”
”அப்படியெல்லாம் உங்களை விட்டுட முடியாது சரி உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்ல வந்தேன், அதுக்குள்ள வேற வேற கதைகள் வந்துடுச்சி”
”முக்கியமான விசயமா என்ன அது”