(Reading time: 22 - 43 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

பிறந்தது. அதனால ஆண்டாளுக்கு பிறந்த பெண் குழந்தையை தூக்கிட்டு அந்த இடத்தில உன்னை வைச்சிட்டேன்“

  

”அப்ப உண்மையான பெண் குழந்தை என்ன ஆனா”

  

”அவளை அன்னிக்கே புதைச்சாச்சி, நம்ம வீட்டு தோட்டத்தில ஒரு பெரிய புளியமரம் இருக்குல்ல”

  

”ஆமாம்”

  

”அதுக்கு கீழதான் அந்த குழந்தையை புதைச்சோம், உயிரோடவே புதைச்சிட்டோம், இந்த விசயம் யாருக்கும் தெரியாம நான் பார்த்துக்கிட்டேன்”

  

”அப்போ என்னோட உண்மையான அம்மா என்ன ஆனாங்க“

  

”அவளா பிரசவத்தப்பவே இறந்துட்டா”

  

”நான் பிறந்தப்பவே அவங்க இறந்துட்டாங்களா அய்யோ” என கண்ணீர் சிந்திய மகனை அடித்தார்

  

”மடையா இப்ப அதுவா முக்கியம், நான் என்ன உன் அம்மாவை கல்யாணமா செய்துக்கிட்டேன் கூட வைச்சிக்கிட்டேன் அவ்ளோதான், அந்தக் கதையை விட ஊர் உலகத்துக்கு நீ என் பிள்ளை அதுல மட்டும் உறுதியா இரு சரியா” என சொல்ல பொன்முடியோ குலுங்கி குலுங்கி அழ சங்கமேஸ்வரனுக்கு தலையே வலித்தது

  

”எந்த உண்மை உனக்கு தெரிஞ்சா வருத்தப்படுவியோன்னு நினைச்சி மறைச்ச விசயத்தை இன்னிக்கு அந்த நாச்சியாவால சொல்ல வேண்டியதா போச்சி வருத்தப்படாதடா இப்படி நீ அழறதால உன் பிறப்பை மாத்த முடியாது, உன் தலையெழுத்து படிதான் நீ வாழ்ந்தாகனும்” என சொல்ல அவனோ

  

”அப்ப கலாவதி எப்படிப்பா”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.