”அவள் எனக்கும் ஆண்டாளுக்கும் பிறந்த பொண்ணுதான், அதுல எந்த மாற்றமும் இல்லை”
”அப்படின்னா அவள்தான் இந்த வீட்டு நேரடி வாரிசா“
”அய்யோ இல்லைடா நீதான் வாரிசு நீ என் பிள்ளையாச்சே“
”போப்பா நீ என் அம்மாவை கல்யாணம் செய்திருந்தா கூட நான் வாரிசாகியிருந்திருப்பேனே“
”அப்படி செய்ய முடியாது செய்தா என்னை என் மாமனாரே வெட்டிக் கொன்னுடுவாரு“
”ஏன் அப்படி”
”ஏன்னா என்ன சொல்றது உன்னோட உண்மையான அம்மா கீழவீதியை சேர்ந்தவளாச்சே” என சொல்ல பொன்முடிக்கு திக்கென்றது
”என்னது கீழவீதியா” என அலற
”சரி விடு விடு இப்ப அதுவா முக்கியம், போனவங்களை பத்தி பேசி பிரயோசனம் இல்லை, நான் இருக்கேன்ல உனக்கு அப்புறம் என்ன கவலை விடு” என சொல்ல பொன்முடிக்கு ஒரு நொடி தனது பிறப்பு ரகசியம் தெரிந்ததும் என்னவோ உள்ளம் கலங்கிவிட்டது.
”பொன்முடி என்னடா சிலை மாதிரி உட்கார்ந்திருக்கா, இப்படியிருக்காதடா எனக்கு பயமாயிருக்கு டேய் ஏதாவது பேசுடா”
”பாவம்பா அம்மா“
”என்ன செய்றது போனா போகட்டும் விடு, அவள் தலையெழுத்து உன்னை பெத்துப்போட்டு செத்துப் போயிட்டா“