(Reading time: 28 - 56 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

போனேன், என்னை விட்டுட்டு அவங்க போயிட்டாங்க போல, நான் மயக்கம் தெளிஞ்சி எழுந்து பார்த்தேன், யாருமே இல்லை எனக்கு கோபம், ஆத்திரம், வெறியில என்ன செய்றதுன்னு தெரியலை

  

அந்த சமயம் அந்த பக்கமா ஒரு ஆள் போனான், என் கண்ணுக்கு அவன்தான் கோவலன் போல தெரிஞ்சான், கோபத்தில ஆத்திரத்தில அவனை போட்டு அடிச்சி உதைச்சி அவனை கொன்னேன், அப்புறம்தான் தெரிஞ்சது அது கோவலன் இல்லைன்னு, யார்ன்னே தெரியாத ஒருத்தனை நான் கொன்னுட்டேன், இந்த விசயம் வெளிய தெரிஞ்சா நான் ஜெயிலுக்கு போகனும் அதுக்கு பயந்தேன்

  

அதே சமயம் கோவலனை பழிவாங்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சதா நினைச்சி நான் கொலை செய்தவனை பார்த்தேன், அவனது முகத்தை மட்டும் கல்லால அடிச்சி சிதைச்சிட்டு என்னோட பொருட்களை அவன் பக்கம் வைச்சேன், என்னோட உடையை அவனுக்கு உடுத்திட்டு அவனோட உடையை நான் உடுத்திக்கிட்டேன், அந்த உடம்பை அங்கயே போட்டுட்டு நேரா கோவலன் இருந்த எஸ்டேட் பங்களாவுக்கு போனேன்.

  

அங்க கோவலன் மாதவிக்கு ஆறுதலா இருந்ததை பார்த்து தாங்க முடியாம நொந்துப் போனேன், அவங்க அசந்த நேரம் பார்த்து கோவலனோட சில பொருட்களை திருடிக் கொண்டு வந்து அதை செத்த பிணத்துக்கிட்ட போட்டுட்டு நான் பாட்டி வீட்ல போய் தங்கிட்டேன், அதுக்கு அப்புறம் நான் நினைச்ச மாதிரி இந்த விசயம் பெரிசாச்சி, கோவலன் கைதானான், நான் சந்தோஷப்பட்டேன், அவங்களுக்கு ஆதாரமே கிடைக்காத மாதிரி நான் செய்தேன், ஆனா அப்படியும் நான் கண்ணகிகிட்ட மாட்டிக்கிட்டேன்” என சொல்ல ஜட்ஜோ

  

”தப்பை ஒத்துக்கறீங்களா” என கேட்க சிலம்புவும்

  

”ஒத்துக்கறேன்” என்றான் அமைதியாக அதில் ஜட்ஜோ இருந்த கோபத்தில் தீர்ப்பு எழுதினார்

  

”சின்ன வயசுல இருந்து சிலம்பரசன் செய்த தப்புக்கு தண்டனை கிடைக்கலை, அவன் செய்த ஒவ்வொரு தப்பையும் மூடி மறைச்ச அவனோட அப்பாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன், மகனை நல்வழிப்படுத்தாம விட்டதுக்கும் அவனால பலபேர் பாதிக்கப்பட்டதுக்கும் அவருக்கு இந்த தண்டனை

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.