(Reading time: 28 - 56 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

அதோ போல சிலம்பரசன் செய்த நிறைய தவறுகளுக்கு அப்பவே தண்டனை கிடைச்சிருந்தா அவன் திருந்தியிருப்பான், மேற்கொண்டு தவறு செய்திருக்க மாட்டான், அவன் முன்னாடி செய்த தப்புகளுக்கு ஆதாரங்கள் இல்லை, அதுக்கான வழக்கும் பதிவாகலை, இருந்தாலும் மனசாட்சிபடி அவன் செய்த எல்லா தப்புகளையும் ஒத்துக்கிட்டதால அதை கணக்கில் கொண்டு அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கும்படி தீர்ப்பளிக்கிறேன், குற்றவாளி என சொல்லப்பட்ட கோவலனை நிரபராதி என தீர்ப்பளிக்கிறேன்” என சொல்லி தீர்ப்பை எழுதி முடித்துவிட்டு எழுந்து நிற்க அனைவரும் எழுந்து கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

  

அதோடு அந்த ஜட்ஜ் தன் பதவி காலத்தை முடித்து ரிட்டயர்டு ஆனார், தன் வீட்டிற்குச் செல்லும் முன் கண்ணகி, கோவலன், மாதவி இம்மூவருக்கும் நன்றி சொன்னார்

  

”சரியான நேரத்தில நீங்க மட்டும் ஆதாரத்தோட வராம இருந்திருந்தா என்னோட கடைசி வழக்குல தவறான தீர்ப்பு கொடுத்துட்டோமேன்னு நினைச்சி குற்ற உணர்ச்சியிலயே நான் இறந்துப் போயிருப்பேன்”

  

”அய்யோ ஏன் அப்படி சொல்றீங்க” என கோவலன் சொல்ல அதற்கு அவரோ

  

”உண்மைதான், நான் ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆளு, அதனாலயே எனக்கு நிறைய முறை இடம் மாற்றம் வந்தது, நான் நேர்மையா இருந்து பல வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லியிருக்கேன், என்னை எத்தனை பேர் மிரட்டினாங்க தெரியுமா, ஆனா நான் யாருக்குமே இதுவரைக்கும் அடிபணிஞ்சதில்லை.

  

எனக்குன்னு குடும்பம் கூட நான் அமைச்சிக்கிட்டதில்லை, குடும்பம் இருந்தா என்னோட வேலையால அவங்களுக்கு ஆபத்து வரும்னு நினைச்சேன், நான் வக்கீலா இருந்தப்ப பல பேருக்கு நன்மை செய்திருக்கேன், தப்பானவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கேன், நான் ஜட்ஜான பின்னாடி கூட நேர்மையாதான் நடந்துக்கிட்டேன்

  

இதுதான் என் கடைசி வழக்கு, இதுல மட்டும் நான் நேர்மைக்கு விரோதமா தவறான தீர்ப்பு எழுதியிருந்தா அதை நினைச்சி நான் சாகறவரைக்கும் வருத்தப்பட்டிருப்பேன், என்னை குற்ற

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.