ஆனா இதுல கோவலன் மாதவியை காதலிக்கற விசயம் யாருக்குமே தெரியாம போயிடுச்சி, அந்த விசயம் எப்படியோ சிலம்புவுக்கு தெரிஞ்சி அதையே வைச்சி மிரட்டி கண்ணகியை அடிபணிய வைச்சி அந்த கல்லூரிக்கு பிரின்சிபாலானான்.
ஈஸ்வரமூர்த்தி இறந்துட்டாரு, கண்ணகியும் கோவலனும் பிரிஞ்சிட்டாங்க, மாதவி எங்க போனா என்ன ஆனாள்ன்னும் தெரியலை, எல்லாரும் ஒதுங்கினதால சிலம்புவுக்கு கொண்டாடமா இருந்தது, அவனை கேள்வி கேட்க கூட யாருமில்லாம போயிட்டாங்க
அதுக்கு அப்புறம் அவனோட ஆட்டம் அதிகமாச்சி, ஒழுக்கமா இருந்த கல்லூரியை மோசமாக்கினான், கல்லூரி பணத்தை திருடி ஆடம்பரமா வாழ ஆரம்பிச்சான், இப்படியே போனா கல்லூரியை இழுத்து மூடற நிலைமை வந்துடும்னு பயந்து நான் கோவலன்கிட்ட உதவி கேட்டேன், கோவலனும் கண்ணகியோட சேர்ந்து மறுபடியும் அந்த கல்லூரிக்கு வந்தாங்க, சிலம்புவை விரட்டியடிச்சாங்க, அந்த கல்லூரியை சரியாக்கினாங்க, அது சிலம்புவுக்கு பிடிக்கலை.
வெறி பிடிச்சவன் போல கத்தினான், அவனால யாருக்காவது ஆபத்து வர்றதுக்குள்ள அவனை ஊட்டிக்கு போக சொல்லிட்டேன், இங்க இருந்தா உன்னாலதான் எல்லாம் ஆச்சின்னு சொல்லிடுவேன்னு பயம் காட்டினேன், அவன் பயந்தமாதிரி தெரியலை, என்னவோ இங்க எதுவும் செய்ய முடியலைங்கற ஆதங்கத்தில ஊட்டிக்கு போனான், பாட்டி வீட்ல தங்கினான், அவ்வளவுதான் எனக்குத் தெரியும், ஊட்டியில என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க” என கைகூப்பி கண்கள் கலங்கினார்.
அதைக்கேட்ட ஜட்ஜோ அரசு தரப்பு வக்கீலிடம்
”இவர்தான் உண்மையான சிலம்பரசன் அப்பான்னா நீங்க கூட்டிட்டு வந்தது யாரு”
”சிலம்பரசன் தன் மகன்னு இவராதான் வந்தாரு” என சொல்ல ஜட்ஜோ பொய்யாக வந்தவரிடம்
”யார் நீங்க எதுக்காக பொய் சொன்னீங்க” என கேட்க அவரோ தடுமாறினார், பயந்தார், ஓட