என கத்திக் கொண்டே உதயமூர்த்தியை அழைத்துக் கொண்டு வந்தாள்.
அனைவருமே அதிர்ந்தார்கள், ஜட்ஜ் கூட உடனே தன் இருக்கையில் அமர்ந்தார். அவளோ அவசர அவசரமாக உதயமூர்த்தியை ஜட்ஜிடம் காட்டி
”சிலம்பரசனுடைய உண்மையான அப்பா இவர்தான்” என சொல்லி மூச்சிரைக்க ஜட்ஜ் குழம்பினார்.
அரசு தரப்பு வக்கீலோ அதை பொய் என வாதாட கோவலன் தரப்பு வக்கீலோ மாதவி சொன்னதை வைத்துக் கொண்டு வாதாடினார், அதில் உதயமூர்த்தி வாய் திறந்தார் அனைவரையும் பார்த்து கைகூப்பி மன்னிப்பு கேட்டபடி பேச ஆரம்பித்தார்
”என் பேரு உதயமூர்த்தி, என் மகன்தான் சிலம்பரசன், சின்ன வயசில இருந்தே சிலம்பு ரொம்ப கிரிமினல் புத்தியோட இருந்தான், அவனோட குணம் சரியில்லைன்னு அவனோட அம்மா அவனை அடிக்கடி திட்டுவா, அடிப்பா, அப்படியாவது அவன் திருந்துவான்னு பார்த்தா ஆனா ஒரு நாள் அவன் கோபத்தில் அவனோட அம்மாவையே கிணத்துல தள்ளி விட்டு கொன்னுட்டான்” என சொல்லி அழுதார். அவரை யாரும் தடுக்கவில்லை அவரே சில நொடிகள் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு
”அந்த சமயத்தில அவனை காப்பாத்த நினைச்சி கால் தடுமாறி என் மனைவி கிணத்துல விழுந்துட்டதா சொல்லி உண்மையை மூடி மறைச்சேன், அதுவே சிலம்புவுக்கு சாதகமா போயிடுச்சி, என் மனைவி இறந்தபின்னாடி எனக்கு சிலம்பு மேல கோபம் ஆத்திரம் அவனை நான் வெறுத்தேன், எனக்கு மகனா இருக்க கூட அவன் தகுதியில்லைன்னு நினைச்சி ஒதுக்கினேன்
ஊருக்குள்ள இருந்தா இவன் ஏதாவது தப்பு செய்வான்னு ஊட்டியில இருக்கற அவனோட பாட்டி வீட்ல தங்க வைச்சேன், அங்கிருக்கற கான்வென்டில படிக்க வைச்சேன், ஊருக்குள்ள என் மனைவி இறந்துப் போயிட்டா அந்த துக்கம் தாங்காம என் மகன் ஓடிப்போயிட்டதா நம்ப வைச்சிட்டு இத்தனை நாளும் நான் தனிமரமா வாழ்ந்தேன்.