அழைத்துச் சென்றார்கள் அதிகாரிகள். ஜட்ஜோ வக்கீலிடம் பேசுவதற்கு அனுமதி தர வக்கீலோ
”யுவர் ஆனர் மார்ச்சுவரியில இருக்கற உடல் சிலம்பரசனுடையதே அல்ல என்பதுதான் எனது வாதம்” என சொல்ல உடனே அரசு தரப்பு வக்கீலோ
”இது அபாண்டமான பொய், இரத்த வகையும் அங்க அடையாளங்களும் ஒத்துப் போகிறது யுவர் ஆனர்” என சொல்ல
”இருந்தாலும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்தால் தெளிவாகும்”
”அதையும் செய்தாயிற்று” என சொல்லிய அரசு தரப்பு வக்கீல் ஒரு டெஸ்ட் ரிசல்ட்டுடன் முன் வந்தார். அதை வாங்கிப் பார்த்த ஜட்ஜ்
”மார்ச்சுவரியில இருக்கற உடல் சிலம்பரசனுடையது என ரிசல்ட் சொல்லுது” என சொல்ல கோவலன் சார்பாக வந்த வக்கீலோ
”அதெப்படி அவங்க உறுதியா சொன்னாங்க, எதை வைச்சி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தாங்க” என கேட்க அதற்கு அரசுதரப்பு வக்கீலோ ஒரு ஆளை முன் நிறுத்தி
”இவர்தான் சிலம்பரசனுடைய தந்தை” என சொல்ல கோவலன் அதிர்ந்தான்.
கோவலன் தரப்பு வக்கீலோ சிலம்பரசனது தந்தை என வந்தவரிடம் விசாரனை மேற்கொண்டார், அவர் சொல்லிய தகவல்களை வைத்துக் கொண்டு ஜட்ஜ் தீர்ப்பு எழுத ஆரம்பித்தார், அதன்படி கோவலனுக்கு ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டது. அதில் கோவலன் கதிகலங்கினான், அவனை பிடித்துக் கொண்டனர் போலீஸ் அதிகாரிகள், ஜட்ஜ் கூட தன் இருக்கையை விட்டு எழுந்து நின்றார்
அந்நேரம் மாதவி நுழைந்தாள் அவசரமாக
”ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் நீதிபதி அவர்களே தீர்ப்பை மாத்தி எழுதுங்க கோவலன் நிரபராதி”