”இதுக்கு நாம ஜெயில்லயே இருக்கலாம் போல இருக்கே, இந்த மாதவிக்கு என்னாச்சி திடீர்ன்னு காதலிங்கறா, ஷ்ஷ்ஷ் இங்கயே ஏகப்பட்ட பிரச்சனை, இதுல இவள் வேற புதுப்பிரச்சனையா இருக்கா, முதல்ல நான் இங்கிருந்து வெளிய வரனும் அதுக்கு பின்னாடி இருக்கு உண்மையான ஜெயில் தண்டனை எனக்கு” என புலம்பிக் கொண்டே தனது லாக்கப்பிற்குச் சென்றான்.
மாதவியோ கோவலனிடம் பேசிவிட்டு உதயமூர்த்தியை தேடலானாள்.
அந்த பக்கம் கண்ணகி சிலம்புவை தேடலானாள், நேரமோ படு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது, கோவலனுக்கு நேரம் செல்ல செல்ல நம்பிக்கையே குறைந்துக் கொண்டு வந்தது. ஆனாலும் கண்ணகி மீதும் மாதவி மீதும் நம்பிக்கை வைத்திருந்தான்.
அதில் அவனுக்கு இரவு உறக்கம் கூட வரவில்லை, நாளைய தினம் என்னாகுமோ உதயமூர்த்தியோ சிலம்புவோ கிடைக்காமல் போனால் தனக்கு தண்டனை வழங்குவார்களே என பயத்துடன் இருந்தான்.
மறுநாள் பொழுது விடிந்தது.
போலீஸ் அதிகாரிகள் அவனை அழைத்துக் கொண்டு கோர்ட்டுக்குச் சென்றார்கள், அங்கு வக்கீல் மட்டுமே இருந்தார் வக்கீலைக்கண்டதும்
”கண்ணகி மாதவி வந்தாங்களா” என கேட்க அதற்கு வக்கீலோ
”இல்லை யாருமே வரலை”
என சொல்ல அவன் நொந்துப் போனான், சரி விதிபடி நடக்கட்டும் என நினைத்து தன்னை சமாதானமாக்கிக் கொண்டான்.
நேரம் ஓடியது, ஜட்ஜ் வந்தார், முதல் கேஸே கோவலனுடையதுதான், அதற்காக அவனை