“ப்ச்... அதெல்லாம் எதுக்கு லாவி?”
“என்ன பேசுற விவேக்... சரி, இந்த டாக்டர் தாமஸ் என்ன சொன்னார்?”
“என்ன சொன்னார்... நான் ஒரு வருஷம், ஹுஹும், இன்னும் ஒரு பத்து மாசம் வரை உயிரோட இருப்பேன்னு சொன்னார்... ட்ரீட்மென்ட், சர்ஜரின்னு வேற ஆப்ஷன்ஸ் இருந்தாலும் சக்சஸ் ரேட் குறைவுன்னு சொன்னார்...”
“ஓ மை காஷ்! ஐ ஆம் சாரி விவேக்...”
“இட்ஸ் ஓகே லாவி... தயவு செஞ்சு இதை பாரதி கிட்ட சொல்லாதே... எல்லாம் நடந்து முடியட்டும்...”
“என்னடா என்ன என்னவோ பேசுற, உனக்கு அப்படி எல்லாம் எதுவும் ஆகாது...”
“எனக்கும் கூட நீ இது மாதிரி சொல்லும் போது அதுவே உண்மை ஆகிடாதான்னு நப்பாசையா தான் இருக்கு...”
“விவேக்...!!!”
“லாவி, இந்த கம்பெனியை நான் டெவலப் செய்றது முக்கியமா பாரதிக்காக தான்... எனக்கு பிறகு அவளுக்கு எந்த விதமான பிரச்சனையும் இருக்க கூடாது... நீ தான் அவளுக்கு ஹெல்ப் செய்யனும்... அஃப் கோர்ஸ் எனக்கும் உதவனும்... உனக்கு என்னுடைய ஹெல்த் பத்தி தெரிஞ்சதும் நல்லது தான்... இந்த புது கம்பெனி பத்தின டீடெயில்ஸ் எல்லாம் உன் கிட்ட ஷேர் செய்றேன்...”
“அதெல்லாம் இருக்கட்டும் விவேக்! நீ முதல்ல என்னவோ எல்லாமே முடிஞ்சுப் போயிட்டதா நினைக்குறதே தப்பு... இப்போ இருக்க டாக்டர்ஸ் எல்லாருமே எக்ஸ்பெர்ட்ஸ்ன்னு சொல்ல முடியாது.. சின்ன சின்ன விஷயத்துக்கு கூட எல்லோரும் நிறைய டாக்டர்ஸ் கன்சல்ட் செய்றாங்க... நீ இந்த மாதிரி பெரிய விஷயத்துக்கு ஒரே ஒரு டாக்டரோட பேச்சை கேட்குறதே